Tamil Sri Admin

யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை

கொரோனோ சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற கொரோனோ தொற்று நோய் சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று (02) பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட ஆறு பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் ஏனைய ஆறு பேருக்கும் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

  ஆகையினால் அந்த ஆறு பேரும் பரிசோதனை முடிவுகளுக்காக தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனோ சந்தேகத்தில் போதனா வைத்தியசாலையில் மட்டும் அனுமதிக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் 50 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதே வேளை வைத்தியசாலைக்கு வெளியே தொற்று நோய் பரிசோதனை மேற்கொண்ட 10 பேரில் 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் ஏனைய 7 பேர் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல தற்போதும் 10 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்களின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
Read More
Sifnas Hamy

கொரோனா தொற்று எந்தவித இனத்தையோ மதத்தையோ நாட்டையோ குறிப்பிட்டு தாக்கும் ஒரு நோயல்ல

Read More
Sifnas Hamy

சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி

சமூர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தவணைககளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் 10 லட்சத்திற்கும் குறைவான வங்கிக் கடன் பெற்ற அரச பணியாளர்களின் மாதந்த கடன் அறவீடுகளை ஏப்ரல் மே மாதங்களில் அறவிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

20 லட்சம் சமூர்த்தி பயனாளிகள் இதன் மூலம் நன்மையடைவார்கள் எனரும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
Read More
Sifnas Hamy

ஊரடங்கு நீக்கப்பட்ட பின் பெண் ஒருவருடன் விடுதியில் தங்கிய நபர் மரணம்!!


காலி எல்பிட்டி பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதியில் நேற்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனேகொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான இந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எல்பிட்டிய பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அதே பிரதேசத்தை சேர்ந்த வேறு பெண்ணொருவருடன் விடுதிக்கு வந்து அறையில் தங்கியிருந்த போது அந்த நபருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அறையில் அந்த நபருடன் தங்கியிருந்த பெண் சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியை வரவழைத்துள்ளார்.

எனினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உடலை பரிசோதித்தவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு செல்லும் முன்னர் குறித்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உயிரிழந்த நபருடன் இந்த பெண் சுமார் ஒரு வருட காலமாக தவறான தொடர்பில் இருந்துள்ளது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் எல்பிட்டிய பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More
Sifnas Hamy

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு


ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation ) செல்லுபடியான காலம் மே மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், 2019 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை (Media Accreditation ) செல்லுபடியான காலம் முன்னர் அறிவிக்கப்பட்ட வகையில் 2020 மார்ச் 31ஆம் திகதி வரையில் செல்லுபடியானதென உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய மே மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை (Media Accreditation ) இது வரையில் கிடைக்கப்பெறவில்லை.

இருப்பினும் 2019 ஆம் ஆண்டுக்கு செல்லுபடியானதாக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையைக் கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் இந்த சந்தர்ப்பத்தில் தமது ஊடக பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்கு வசதிகளை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
Read More
Tamil Sri Admin

அபாயாவுக்கு தடை ஏற்படாத வகையிலான புதிய சுற்றுநிருபத்தை வெளியிடு

முஸ்லிம் பெண்கள் அணிகின்ற அபாயாவுக்கு தடையாக அரச அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கான சீருடை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதாகவும் அபாயாவுக்கு தடை ஏற்படாத வகையிலான புதிய சுற்றுநிருபத்தை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடுவதாகவும் பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இராஜாங்க அமைச்சர் ஹரீஸிடம் உறுதியளித்துள்ளார். 

பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கான சீருடை தொடர்பான சுற்றுநிருபம் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற அபாயாவை தடை செய்வதாக அமைந்துள்ளமை தொடர்பாக பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பேசியபோதே மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.

குறித்த சுற்றுநிருபத்தினால் முஸ்லிம்கள் கொதிப்படைந்துள்ளதாக அமைச்சர் மத்தும பண்டாரவிடம் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அபாயா தொடர்பான தெளிவுபடுத்தல்களையும் வழங்கினார். 

தன்னுடன் ஆலோசனை செய்யாமல் பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் தீர்மானித்து அச்சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை அச்சுற்று நிருபத்தை மாற்றி அபாயா அணிவதற்கு தடை ஏற்பாடாதவகையிலான சுற்று நிருபத்தை வெளியிடவுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் மத்தும பண்டார உறுதியளித்தார்.


(அகமட் எஸ். முகைடீன்)
Read More
Tamil Sri Admin

முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக விக்டோரியா பாா்க் முன்றலில் ஆர்ப்பாட்டம்

சிங்களய பலமண்டலய ஜக்கிய இராச்சியம்  மற்றும் நாட்டை பாதுகாப்போம் எனும் இயக்கங்கள் இணைந்து இன்று (1.6.2019 மு.ப. 3.00 மணியலவில் கொழும்பு விக்டோரியா பாா்க் முன்றலில்  ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினாா்கள்.  

இவ் ஆர்ப்பாட்டத்தில்  அமைச்சா் ரிசாத் பதியுத்தீன், ஆளுணா்களான அசாத் சாலி, கிஸ்புல்லா, முஜிபு ரகுமான் ஆகியோறு புகைப்படங்கள் கொண்ட போஸ்டா்கள் உயா்த்திய வண்னம் கோசங்களில் ஈடுப்ட்டனா். 

கிழக்கினை அரபு வசந்தமாக்கும் கிஸ்புல்லா, காடுகள் வனாந்தரங்களை அழித்து அரபு நாடுகளின் பெரும் நிதியில் இலங்கைக் கொண்டு வந்து பாரிய பயங்கரவாத்தினை உண்டுபண்னுகின்ற அமைச்சா் றிசாத் பதியுத்தீன் இதேவாறு ஆளுனா் அசாத் சாலி ஆகியோா்களை உடனடியாக ஜனாதிபதி பிரதமா் ஆகியோா் பதவியில் இருந்து அகற்றி இவா்களை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு அங்கு உரையாற்றிய தேரா் ஊடகங்களுக்கு தெரிவித்தாா்.  

இவ் ஆர்பாட்டத்தில் அவா்களது வட்ஸ் குருப் மற்றும் முக நுால் நண்பா்கள் பௌத்த மதத் தேரா்கள் குழுமியிருந்தனா்.

(அஸ்ரப் ஏ சமத்

Read More
Tamil Sri Admin

முஸ்லிம்கள் அநாவசியமாகக் கைது செய்யப்படுவதை ஏற்க முடியாது

Related image



எவ்வாறான  சட்டவிரோதப்  பொருட்களை ஒருவர் வைத்திருந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்ற வரையறையொன்றை அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் மக்களுக்கு தெளிவாக வெளிப்படுத்தவேண்டுமென,  மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

அன்றாடம் திட்டமிட்ட முறையில்  முஸ்லிம் மக்கள் அநாவசியமாகக்  கைது செய்வதை ஏற்கமுடியாது.  சட்டவிரோதப்  பொருட்கள் தொடர்பில் வரையறையொன்றை மக்களுக்குத்  தெளிவுபடுத்துவது முக்கியம்.

1983 ஆம் ஆண்டு 13 சடலங்களே கொழும்புக்கு வந்த நிலையில்,  அதுவே 30 வருட யுத்தத்துக்கு வழி வகுத்தது என்பதால், நாம் புரிந்துணர்வுடன் செயற்படுவது முக்கியமாகும்.

இதுபோன்ற அழிவுகள் நாட்டில் இனியும் வந்துவிடக்கூடாது என்பதே எமது விருப்பம். எனினும்,  அப்படியான நிலையொன்று நாட்டில் ஏற்பட வேண்டுமென்றே சில தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகச்  செயற்படும் இவர்கள் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை.

சட்டம்,  எந்தவொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ பாரபட்சமாக இருக்கக்கூடாது. தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட ரீதியில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
முஸ்லிம் மக்கள் அனைவரையுமே சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. பாமர மக்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை,  சம்பந்தப்பட்டோர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

நாட்டில் பாதாள உலக செயற்பாடுகள் போன்று பெரும் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற நிலையிலும், 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்களை அடுத்து,  சாதாரண பொது  மக்களே பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிகளுக்கு இலக்காகி வருகின்றனர்.

தற்போது வாள்களும், கத்திகளுமே பிரச்சினையாகியுள்ளன. இந்த வாள்கள் இரும்புக் கடைகளிலும் விற்கப்படுகின்றன. அவை சட்டவிரோதமானவை என்றால்,  அந்த வாள்கள் இறக்குமதி செய்யப்படும் போது அதனைத் தடை செய்திருக்க முடியும்.

எங்காவது, ஒரு துருப்பிடித்த வாள் கிடைத்தால்,  அதன் அயலிலுள்ளவர் கைது செய்யப்படுகின்றார். இது எந்த விதத்திலும் ஏற்க முடியாது.

சில இடங்களில் பல தடவைகள் சோதனை செய்யப்பட்ட வீடுகள், பள்ளிகளுக்கு அருகாமையிலும் வாள்கள் அல்லது கைக்குண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. அங்கு அவை போடப்பட்டு மீள எடுக்கப்படுகின்றன என்பதே உண்மை. இல்லாவிட்டால்,  பலமுறை சோதனை செய்த இடத்திற்கு இத்தகைய பொருட்கள் எவ்வாறு வர முடியும்.

இத்தகைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சு,  படையினருக்கு அறிவுறுத்துவது முக்கியமாகும். மக்களுக்கும் சட்டவிரோதப்  பொருட்கள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

பள்ளிவாசல்களைச் சோதனை செய்ய வேண்டாமென்று நாம் ஒருபோதும் கூறவில்லை. பள்ளிவாசல்கள் புனிதமான சமயத் தலங்களாகும். அங்கு சப்பாத்துக்கால்களுடன் செல்வது கூடாது என்பதை நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம். 

நாய்கள் என்பது எமது மார்க்கத்திற்கே தவறான பிராணியாகும். இதற்கிணங்க,  பள்ளிவாசல்களுக்குள் நாய்களை அனுமதிப்பது எந்தளவில் தர்மமாகும். அவ்வாறு நாய்களை வைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமானால்,  முன்பே எமக்கு அறிவித்தால் கார்பட் போன்ற ஏதாவது விரிப்புக்களை நாம் போட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

பாதுகாப்புச்  சபையில் இது தொடர்பில் முறையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதியிடமும் நான் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன்.

( ஐ. ஏ. காதிர் கான் )
Read More
Tamil Sri Admin

நிர்மாணிக்கப்பட்ட சில மாதங்களில் உடைந்துபோன குளக்கட்டு (படங்கள்)

அம்பாரை மாவட்ட திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் தாமரைக்கேணி குளத்தின் குளக்கட்டு உடைந்துள்ளபோதும் இன்றுவரை எந்த அரச அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கைளையும் மேற்கொள்ளவி்லலை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கவலை தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்கழி மாதம் அமைக்கப்பட்ட தாமரைக்கேணி குளத்தின் குளக்கட்டு சில மாதங்களிலேயே உடைந்துபோனது. ஆனால் இன்றுவரை இது குறித்து எந்த அரச அதிகாரிகளோ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதமளவில் சேதமடைந்த அணைக்கட்டு காராணமாக இக்குளத்தின் நீர் சேமிப்பு வீதம் கால் வாசியாக குறைந்துள்ளது. இதனால் இம்முறை இடைப்போக வேளான்மை செய்கை பல நூறு ஏக்கர் முற்று முழுதாக கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்லாது அக்குளத்தில் மீன்பிடித்து வாழ்வை நடாத்திச் சென்ற பல மீனவர்கள் இவ்வருடம் கூலித்தொழிலுக்காகச் செல்வதுடன்,  இக்குளத்தில் நீர் இல்லாததால் நூற்றுக்கணக்கான கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கோடை காலத்தில் சேனைப்பயிர் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளும் அவர்களின் தற்காலிக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்களின் நன்மை கருதி இம்மாரி காலத்திற்கு முன்னர், உடைந்த இந்த தாமரைக்கேணி குளக் கட்டை திருத்தி நீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்தார். 
பைஷல் இஸ்மாயில், காமில் நூர்தீன் -



Read More
Tamil Sri Admin

வைத்தியர்களுக்குள் நிலவுகின்ற பிரச்சிணைகளுக்கு தீர்வு.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கி வருகின்ற அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களிலுள்ள ஆயர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்ற ஆயுர்வேத வைத்தியர்களுக்குள் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரினால் தீர்வு வழங்கி வைக்கப்பட்டது. 
ஆலயடிவேம்பு - புளியம்பத்தை பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தக திறப்பு விழா நேற்று (10) இடம்பெற்றதையடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளர் வைத்திய கலாநிதி எம்.ஏ.நபில் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வைத்தியர்கள் பலர் தங்களுக்குள் நிலவும் பிரச்சினைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளை தரும்படி ஆணையாளரிடம் முன்வைத்தனர்.
வைத்தியர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் அவர்களினால் தீர்வு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பைஷல் இஸ்மாயில் -
Read More
Tamil Sri Admin

நாளைய ஹர்த்தால் அழைப்பானது தெளிவான இனவாதச் செயலே.

நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் காரணம் காட்டி கிழக்கு ஆளுனர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆளுனர் பதவிநிலைக்கு எதிரான நாளைய ஹர்த்தால் அழைப்பானது தெளிவான இனவாதச் செயலே.

"வேண்டுமென்றே துவேஷ உணர்வுகள் திணிக்கப்படுவதை புரிந்துகொள்ள முடியாதவர்களாக கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இருக்கமாட்டார்கள்."

அதேபோல், 

"திட்டமிட்டு இனவாதம் வளர்க்கப்படுகிறது என்றால் தேர்தல் நடைபெறப் போகிறது என்று அர்த்தம்."

ஒரு சிலரது அரசியல் தேவைகளுக்காக ஒட்டுமொத்த கிழக்கு மக்களையும் இன்றைய கருத்தாலுக்கு அழைத்திருப்பதை அரசியல் திணிப்பாகவே நாங்கள் கருதுகின்றோம்.

எந்தவித அடிப்படையும் இல்லாமல் இனவாதச் செயற்படுகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த அப்பாவி தமிழ்மக்களையும் பகடைக்காயாக மாற்ற முயலுவது இன்னும் பல தசாப்தங்கள் தமிழ்மக்களை பின்னோக்கி நகர வைக்கும் என்பதனை தமிழ் இனத்திலுள்ள புத்திஜீவிகளும் புரிந்துகொள்வார்கள் என்றே கருதுகின்றோம்.

இதேபோன்று, கடந்த காலங்களிலும் மக்களை துவேஷ உணர்வுகளால் வழிப்படுத்தி பலரை நாடற்றவர்களாகவும், நடுத்தெருவிலும் விட்டிருக்கிறீர்கள் என்பதனை தெளிந்த மனதுடன் சம்பந்தப்பட்ட இனவாதிகள் புரிந்துகொள்ளவும் வேண்டும். தமிழர்கள் தனக்கான உரிமையினைப்  பெற்றுக் கொள்ளும் அதே வேளை முஸ்லீம் மக்களுக்கான உரிமையினையும் பெற்றுக் கொள்ள உந்துவது இந்த நாட்டில் நிரந்தர சகவாழ்வை ஏற்படுத்தும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிலரால் அரங்கேற்றப்படும் இனவாத தாக்குதல்களுக்கும் - தற்போதைய நாட்டின் அரசியல் மாற்றங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கின்தறது என்றே தோன்றுகிறது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியலுக்காக அதிலும் குறிப்பாக தேர்தல்கள் நெருங்கி விட்டால் இனவாதம் கக்கப்படுவதும், பிரதேசவாதம் பேசப்படுவதும் இயல்புதான் இருந்தாலும் இதனால் அப்பாவி மக்கள் தேவையற்ற முறையில் பாதிக்கப்படுவதுதான் கவலையாகவுள்ளது.

இவ்வாறான இனவாதங்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றவர்கள் அப்பாவி தமிழ் மக்கள்த்தான் என்பதனை சம்பந்தப்பட்ட இனவாத நடவடிக்கைகளுடன் தொடர்பானவர்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும். இதற்கு பல உதாரணங்கள் கடந்தகால அனுபவங்களிலும் மிகத் தெளிவாக இருக்கிறது.

இவ்வாறான இனவாத நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் எவைகளை கடந்த காலத்தில் இழந்தார்கள்.
  1. தங்களது பாசமான சிறுவர்களின் உயிர்களை இழந்திருக்கிறார்கள்.
  2. அன்பான குடும்பத்தார்களை வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக அனுப்பியுள்ளார்கள்.
  3. அண்மைய தரவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பில் அதிக வறுமையில் சிக்குண்டிருப்பவர்கள் முஸ்லீம்களைவிட தமிழ் மக்கள்தான் அதிகம்.
  4. அதிகமான தமிழ் இளைஞர்கள் எவ்வித இலக்குகளும் இல்லாமல் முஸ்லீம்களை விட அதிகமாக மதுபோதைக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
  5. கடந்த கால தமிழ் ஈழ வடுக்களில் இருந்து இன்னும் மீழாத பல அப்பாவி தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
  6. தமிழ் அரசியல்வாதிகளை வைத்து தமது பிரதேச அரசியலை முறையாக செய்யப் பழகாத தமிழ் மக்கள்.
"தேர்தல் காலங்களில் கோயிலுக்கு இரண்டு ஒலிபெருக்கியும், இரவு நேரங்களில் பருகுவதற்கு  மதுபானங்களும்தான்  அதிமான தமிழ் இளைஞர்களின் முற்போக்கற்ற நடைமுறைகளாகவும் கோரிக்கையாகவும் இருக்கிறது"

ஒன்றை மட்டும் சம்பந்தப்பட்ட குழப்பதாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான இனத்துவேசங்களால் பாதிக்கப்படுவது அப்பாவி தமிழ் மக்களே. ஏனென்றால் திட்டமிடப்பட்ட பொருளாதார நடைமுறைகள், சமூக கலாசார விடயங்கள் முறையாக தமிழ்ப்பகுதிகளில் அமுல்படத்தப்படவில்லை என்பதுதான்.

அதேபோல் கிழக்கு கிழக்காகவும், வடக்கு வடக்காகவும் இருப்பதுதான தமிழ், முஸ்லீம் மக்களுக்கு பிரயோசனமானது அதனால் முஸ்லீம் ஆளுனரோ அல்லது முதலமைச்சரோ கிழக்கில் முஸ்லீமாக இருப்பதில் எந்தவித தவறும் இல்லை.

கடந்தகாலங்களில் தமிழ் மக்களை தமிழ் ஈழம் என்ற பெயரில் நட்டாற்றில் விட்டு சின்ணாபின்னமாக்கியவர்கள்தான் இன்று தமிழ் சமூகம், தமிழ் மக்களின் வளர்ச்சி, என்றெல்லாம் அரசியல் பேசுகிறார்கள் என்பதனை புரிந்துகொள்ளாதவரை இவ் இனத்துவேசங்களை எம்மால் தவிர்க்க முடியாது என்பதே உண்மையுமாகும்.

அரங்கேற்றம் செய்யப்பட்ட ISIS பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் பாரிய அரசயல் காரணிகள் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்ற அதேவேளை திட்டமிட்டு முஸ்லீம்களின் மத கலாசார விடயங்களுக்கு பல தடைகளும் ஏற்படுத்தப்பட்டும் உள்ளது. இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலர் தங்கள் சார்பான கவனயீனங்களை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆளுனர் பதவியை இல்லாமல் செய்ய எத்தனிக்கும் நாளைய கருதாலுக்கான அழைப்பானது திட்டமிட்ட இனவாதமே.

[MLM- சுஹைல்]
Read More
Tamil Sri Admin

புர்காவே தடை போன்ற முஸ்லிம் பெண்களை மையப்படுத்திய விழிப்புணர்வு புகைப்படங்கள் பகிரப்படுவதன் நோக்கமென்ன?

தற்போது இலங்கை ஜனாதிபதியால் புர்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக இனவாதிகள் கழற்ற முயற்சித்த புர்காவை, தற்போதுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை சாதகமாக பயன்படுத்தி இலகுவாக கழற்றிவிட்டார்கள். அண்மையில் திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் ஹபாயாவை கழற்ற தமிழினவாதம் தலைகீழாக நின்று போர்க்கொடி தூக்கியிருந்தது. அவ்வாறானவர்களுக்கு இச் செய்தி இனிப்பாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. இன்று ஹபாயா கழற்றப்படாவிட்டாலும், புர்கா தடையினூடாக ஹபாயாவும் வெகு விரைவில் கழற்றப்படுமெனும், அவர்கள் மிக நீண்டகாலமாக எதிர்பார்த்த இனிப்பான செய்தியை பெற்றிருப்பார்கள்.
இம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, விழிப்புணர்வு என்ற வகையில் கடைகளிலும், வாகனங்களிலும் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள், இலங்கை அரசு ஹபாயா, பர்தா போன்றவற்றையும் தடைசெய்துள்ளது என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளன. ஒரு புர்கா அணிந்த பெண்ணின் புகைப்படத்திற்கு குரொஸ் அடையாளம் (×) போட்டுக்காட்டியுள்ளார் (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.). இவ்வாறு ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் புர்காவுடன் சேர்த்து பர்தா, ஹபாயா போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தையே வழங்குகிறது.
இவ்வாறான புகைப்படங்களை ஒட்டுவதே, இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே! அந்த விழிப்புணர்வே தவறாக அமைந்தால், அது வேறு வகையான விளைவுகளை ஏற்படுத்தும். சமூக வலைத்தளங்களுடன் தொடர்பற்றவர்கள், குறித்த ஸ்டிக்கர்கள் வழங்கும் தவறான பொருளை உள்ளத்தில் பதித்து கொள்வார்கள். அதன்படி அவர்கள் செயற்பட்டால்?
இவ்வாறு ஒட்டப்படும் ஸ்டிக்கர்களில் ஹபாயும் தடை என்பது போன்றும் காட்டப்படுவதால், ஹபாய் மீதான வெறுப்பு, உளவியல் ரீதியாக மக்கள் உள்ளங்களில் விதைக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு விடயம் பிழையானதென்பதை சுட்டிக்காட்டும் விழிப்புணர்வு படங்களை, பதாதைகளை அடிக்கடி காணும் போது, தங்களை அறியாமலேயே அது தொடர்பான வெறுப்பு உள்ளத்தில் பதிக்கப்பட்டுவிடும். சில வேளை, இவ் விடயத்தை மையமாக கொண்டும் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படலாம்.
தற்போது ஜனாதிபதியால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை மாத்திரம் தடை செய்யும் ஒரு சட்டமல்ல. முகத்தையும், காதையும் மறைக்கக் கூடாது என கூறும் இலங்கை மக்கள் அனைவருக்குமான பொதுவான சட்டம். சட்டம் இவ்வாறிருக்க, முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவது மாத்திரமே தடை போன்ற முஸ்லிம் பெண்களை மையப்படுத்திய விழிப்புணர்வு புகைப்படங்கள் பகிரப்படுவதன் நோக்கம் தான் என்ன?
குறித்த சட்ட விடயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த சிந்திப்பவர்கள், இலங்கை அரசு முகத்தையும், காதையும் மறைப்பதை தடை செய்துள்ளது எனும் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தின் உரிய பொருளை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவே பொருத்தமானது. இதில் முஸ்லிம் பெண்களை குறிக்கும் விழிப்புணர்வு சுட்டிக்காட்டல்கள் அவசியமற்றது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
Read More
Tamil Sri Admin

Pakistan foreign minister’s Sri Lanka visit postponed

Pakistan Foreign Minister Shah Mahmood Qureshi postponed his visit to Sri Lanka due to security clearance in the wake of recent terror attacks.

The foreign minister was slated to visit the country on the invitation of the Sri Lankan government.
Read More
Tamil Sri Admin

இனங்களுக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் கடிதங்களுடன் 3 வர் கைது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவின் அலுவலக ஊழியர்கள் மூவர் கொழும்பு புறக்கோட்டை பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும் இனங்களுக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்ட கடிதங்கள் 600 ஐ கண்டி மாவட்டத்தில் உள்ள விகாரைகளுக்கு தபாலிட வந்த வேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Hiru.





Read More
Tamil Sri Admin

எனது சாரதியாக இருந்தாலும் பொலிஸாரின் கடமையை தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே! நான் அதில் தலையிடவில்லை


ஒரு குழுவினரின் காட்டு மிராண்டித்தனமான கொடுமையான செயற்பாடுகளால் முழு முஸ்லிம்களையும் இந்த அரசுதீவிரவாதிகளாக பார்க்கவில்லை. இதனால் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றும், சம்பந்தப்பட்ட தீவிரவாதக்கும்பல்களை கண்டுபிடிப்பதற்காகவே இராணுவத்தினரும், பொலிஸாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதற்குநாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டைமேற்கொள்ளப்படுகின்றமையும், அதனால் மக்கள் குழப்பத்தில் உள்ள நிலை கருதி நேற்று (2) நடாத்திய ஊடகவியலாளர்சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது,

இராணுவத்தினரும், பொலிஸாரும் சோதனைகள் செய்து வருகின்றார் என்பதற்காக குர்ஆன், கிதாப்கள் மற்றும் இஸ்லாமியபுத்தகங்களை யாரும் எரிக்கவோ அழிக்கவோ தேவையில்லை. நாம் எதற்காக இவ்வாறு செய்யவேண்டும். ஒரு சில இனவாதக்கும்பல்களின் அராஜக செயற்பாட்டால் முழு முஸ்லிம்களும் அச்சத்தில் உள்ளனர். உண்மையிலே இவ்விடயம் கவலையளிக்கிறது.

அதற்காக குர்ஆன், கிதாப்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை எரிக்க, அழிக்க வேண்டிய எந்தத் தேவையும் எமக்கில்லை. தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு அஞ்சி ஒருபோதும் எமது மதத்தின் அடிப்படை செயற்பாடுகளை யாரும் கைவிடாதீர்கள்.தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை நூறு வீத முஸ்லிம்களும் கண்டிப்பதுடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புட்டவர்களைஇனம் காட்டியுள்ளனர்.

அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமாயின் அதற்காக குரல்கொடுக்க நானும் எமது முஸ்லிம் காங்கிரஸூம் தயாராக உள்ளோம். இந்நாட்டின் ஒற்றுமைக்கும், இன ஐக்கியத்திற்கும் முஸ்லிம் சமூகம் பெரும் பங்களிப்பினைச் செய்துள்ளது.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர் எனது சாரதியாக இருந்தாலும்கூட பொலிஸார் அவர்களின் கடமையை தங்குதடையின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளாது உள்ளேன். பாழடைந்த காணியில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களும், அருகில் சட்ட ரீதியாக வெடிபொருள் வைத்திருந்தவரின்வெடிபொருட்களையும் சேர்த்தே காட்டப்பட்டுள்ளது.

பாழடைந்த காணியின் எதிர் வீடுதான் எனது சாரதியின் தாயாரின் வீடாகும். தனது தந்தைக்கு சுகமில்லை என்பதாலேயே தாய் வீட்டில் சாரதி இருந்துள்ளார். நேற்று மதியம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எனது சாரதி கடுமையான விசாரணைகளுக்குப் பிறகு நேற்றிரவுசம்மாந்துறைப் பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளார்.

தனது வாக்கு மூலத்தில் தனக்கும் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெவித்துள்ளார். அந்த வகையில் அவரது உண்தை்தண்மைஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என நான் நம்புகின்றேன்.

இவ்வாறு விடயங்கள் இருக்கின்றபோது இனவாத ஊடகங்கள் என்னையும் தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிடுகின்றது. இதுமிகவும் கவலைக்குரியதாகும்.

அது மட்டுமல்லாது, சாய்ந்தமருதில் இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இறந்துபோன பெண் மற்றும் காயமடைந்த பொதுமக்களை பார்வையிடுவதற்காகவும், ஜனாஸாவை கொண்டு வரும்செயற்பாட்டிற்காகவும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நண்பர் ஜெமீலின்அழைப்பின் பேரில் அம்பாரை போதனா வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். அப்போது நோயாளர்களைப் பார்வையிடுவதற்கான நேரம் இன்னும் அரை மணித்தியாலயம் இருப்பதால் உரிய நேரத்திற்குசென்று பார்வையிடுமாறு எமக்கு சொல்லப்பட்டது. அத்துடன் எம்மோடு வைத்தியசாலைக்கு வந்த சாய்ந்தமருது பொதுமக்களைபல கேள்விகளை கேட்டு சங்கடத்திற்குள் ஆளாக்கினர்.

நான் அந்த இடத்துக்ச் சென்று அவர்கள் வந்த நோக்கத்தைதெளிவுபடுத்தினேன். அவ்வாறு செய்த விடயத்தைக்கூட அதுவும் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன் என்ற விடயம் தெரிந்தும் என்னையும் சேர்த்து வேறுவிதமாகத்தான் பார்க்க முற்பட்டனர்.

இதன் காரணமாக வைத்தியாசலையை விட்டு வெளியேறிவிட்டோம். சம்பவம் இப்படியிருக்க, தற்கொலைத் தாக்குதலுடன்தொடர்புட்ட சஹ்ரானின் மனைவியைப் பார்க்கப் போனதாகக் கூறி மிகப் பெரிய அப்பட்டமான பொய்ச் செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக எனது சட்டத்தரணிகளுடன் ஆலோசித்துவருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களோடு மக்களாக நின்றுகொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் வாழ்க்கை நிலையை வழமையான நிலையைக் கொண்டு வரவேண்டிய பாரிய பொறுப்பு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்குள்ளது.

இவ்வாறு செய்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது அபாண்டங்களையும், பொய்களையும் சொல்லி தீவிரவாதத்துடன்தொடர்புபடுத்த சில ஊடகங்கள் முற்படுகின்றது. அது மாத்திரமல்ல சில அரசியல்வாதிகளும் முற்பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். இது சமூகத்தின் மீதான பிரச்சினை இந் நேரத்தில் முழுநாட்டிலுமுள்ள அனைத்து முஸ்லிம்களும் அச்சத்தில் உள்ளனர்.

அவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் யார் குற்றவாளியானாலும்தண்டிக்கப்படல் வேண்டும், யார் தீவிரவாதியானாலும் அழிக்கப்படல் வேண்டும். அதே போன்று எமது பெண் பிள்ளைகளின் ஆடைகளில் கட்டுப்பாடுகள் சில நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகஅறிகின்றேன். அதற்காக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்து உரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்.

 மேலும், சம்மாந்துறை பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது மக்கள்ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள். நானும் வேறு எந்த பகுதிகளுக்கும் செல்லாது மக்களோடு மக்களாக நின்று அவர்களதுசிரமங்களில் பங்கேற்று வருகின்றேன். எனது மக்களை எவ்விதத்திலும் நான் இச்சந்தர்ப்பத்தில் கைவிட்டு எந்த ஒரு வெளிஇடங்களுக்கும் செல்ல மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

 மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் பாதுகாப்பு தரப்பினரால் ஏற்பட்டால் என்னை அவசரமாக தொடர்பு கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றேன். தற்போதுள்ள நிலைமையில் பொலிஸார் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு சோதனைகளுக்குபிரதேச மக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன் மூலமே இவ்வாறான தீவிரவாத்தை முற்றாகத்துடைத்தெறிய முடியும் என மேலும் அவர் தெரிவித்தார். 

மீனோடைக்கட்டு நிருபர் 
பைஷல் இஸ்மாயில்
Read More
Sifnas Hamy

உச்சமன்றில் மன்னிப்பு கேட்டார் ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறியதாக பேசிய வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஆனால் ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி ராகுல் காந்தி நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி லேகி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, ராகுல் காந்தி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருப்பது வெறும் கண்துடைப்புதான் என்றும், அவரது பதில் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என கண்டித்தனர்.
இதையடுத்து, பிரதமரை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறியதாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் கூறினார். மே 6-ம் திகதி ராகுல் காந்தி புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வார் என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை மே 6ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Read More
Sifnas Hamy

வரலாற்றில் இன்று மே 02ம் திகதி


  1. 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார்.
  2. 1568 – லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார்.
  3. 1611 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் ஆதரவில் விவிலியம் இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு இலண்டனில் வெளியிடப்பட்டது.
  4. 1670 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வட அமெரிக்காவில் மென்மயிர் வணிகத்துக்கான உரிமையை அட்சன் விரிகுடா கம்பனிக்குத் தந்தார்.
  5. 1808 – மத்ரித் மக்கள் பிரான்சிய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  6. 1814 – முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமசு கோக் மதப்பரப்புனராக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.[1]
  7. 1889 – எத்தியோப்பியாவின் அரசர் இரண்டாம் மெனெலிக் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
  8. 1906 – இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகளின் இறுதி நிகழ்வுகள் ஏதென்சில் இடம்பெற்றது.
  9. 1933 – இட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.
  10. 1941 – இவ்வாண்டின் ஆரம்பந்தில் இடம்பெற்ற ஈராக்குக்கு எதிரான இராணுவப் புரட்சியை அடுத்து பதவியை இழந்த இளவரசர் அப்துல்லாவை மீண்டும் பதவியில் இருத்த ஐக்கிய இராச்சியம் ஆங்கிலேய-ஈராக்கியப் போரை ஆரம்பித்தது.
  11. 1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. செருமனியப் படை இத்தாலியில் சரணடைந்தன.
  12. 1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் வான்படையினர் செருமனியில் வோபெலின் வதைமுகாமை விடுவித்தனர். இங்கு 1,000 கைதிகள் இறந்து காணப்பட்டனர்.
  13. 1945 – இரண்டாம் உலகப் போர்: டேச்சு கைதிகள் முகாமில் இருந்து ஆஸ்திரியா நோக்கிச் சென்று கொண்டிருந்த கைதிகளை பவேரியாவில் வழிமறித்த அமெரிக்க இராணுவம் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்தது.
  14. 1952 – உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, தனது முதல் பறப்பை லண்டனில் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கு மேற்கொண்டது.
  15. 1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.
  16. 1964 – 8,027 மீட்டர் உயர சிசாபங்மா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.
  17. 1972 – அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நிலத்தடி சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 91 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  18. 1982 – போக்லாந்து போர்: பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் அர்கெந்தீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
  19. 1986 – செர்னோபில் அணு உலை விபத்து நடந்த ஆறு நாட்களின் பின்னர் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
  20. 1989 – பனிப்போர்: ஆஸ்திரியாவுடனான எல்லையை அங்கேரி திறந்து விட்டதில் பெருந்தொகையான கிழக்கு செருமனி மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
  21. 1994 – போலந்து, கதான்ஸ்க் நகரில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் உயிரிழந்தனர்.
  22. 1998 – ஐரோப்பிய நடுவண் வங்கி பிரசெல்சு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
  23. 2002 – கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
  24. 2004 – நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறித்தவர்களால் கொல்லப்பட்டனர்.
  25. 2006 – குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
  26. 2008 – சூறாவளி நர்கீஸ் மியன்மாரில் தரை தட்டியதில் 138,000 பேர் உயிரிழந்தனர்.
  27. 2011 – செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குக் காரணமானவரும், சிஐஏ இனால் தேடப்பட்டு வந்தவருமான உசாமா பின் லாதின் பாக்கித்தானில் ஆப்டாபாத் நகரில் அமெரிக்க சிறப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.
  28. 2011 – ஈ.கோலை தொற்றுநோய் ஐரோப்பாவை, முக்கியமாக செருமனியைத் தாக்கியதில் 30 பேர் வரை உயிரிழந்தனர்.
  29. 2012 – நோர்வே ஓவியர் எட்வர்ட் மண்ச் வரைந்த அலறல் என்ற ஓவியம் நியூயார்க்கில் இடம்பெற்ற ஏலத்தில் $120 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
  30. 2014 – ஆப்கானித்தான் பாதக்சான் நகரில் இடம்பெற்ற மண்சரிவுகளில் சிக்கி 2,500 பேர் காணாமல் போயினர்.
  31. 2018 – பாஸ்கு விடுதலைக்கான தீவிரவாத அமைப்பு எட்டா முழுமையாகக் கலைந்தது.
Read More
Sifnas Hamy

நமது நாடும், முழு முஸ்லிம் சமூகமும் அச்சமும், வேதனையும் அடையும் நிலமை உருவாகி உள்ளது.

அண்மையில் வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து ஒரு குழுவினர் மேற்கொண்ட காட்டுமிராண்டி தனமான செயற்பாடுகளினால்  நமது நாடும் நமது முழு முஸ்லிம் சமூகமும் அச்சமும், வேதனையும் அடையும் நிலமை உருவாகியுள்ளது.


இந்த நிலமையில் முஸ்லிம் சமூகம் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயற்பட்டு, ஏனைய சமூகங்களுடன் புரிந்துணர்வோடு வாழ்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அக்கரைபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. பண்டார, பிரதேச பள்ளி வாசல் தலைவர்கள், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண  சூழ்நிலை தொடர்பாக நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

நமது நாட்டில் 3 தசாப்த காலமாக நடைபெற்ற யுத்த சூழ்நிலையில் இருந்து நமது நாடும் நாமும் விடுதலைபெற்று அமைதியாக வாழ்ந்து வரும் கால கட்டத்தில் அண்மையில் நமது நாட்டில் இடம்பெற்ற மிலேச்சதனமான செயற்பாடு காரணமாக நமது நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், முஸ்லிம் சமயத் தலைவர்களும் கூட்டுத் மொத்தமாக மண்ணிப்பு கோர வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற தாக்குதல்களினால் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பலியான சூழ்நிலையில் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மிக பொறுமையுடனும், மனிதாபிமானத்துடனும் தெரிவித்த கருத்துகளினால் இனங்களுக்கிடையில் ஏற்படவிருந்த பாரிய இனமோதல்கள் தடைசெய்யப்பட்டன. இதற்காக நாம் கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கையின் வரலாற்றில் நமது நாட்டுக்காகவும், சுதந்திரத்திற்காகவும், ஒருமைபாட்டுக்காகவும், சமாதானத்திற்காகவும் வரலாற்று தியாகங்களை நமது முஸ்லிம் சமூகம் வழங்கியதுடன், பெரும்பான்மை சமூகங்களுடனும், ஏனைய சமூகங்களுடனும் ஐக்கியமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகத்தினை சில தீய சக்திகளின் செயற்பாடுகளினால் பூச்சியமாக்கப்பட்ட புதிய நிலமையும் உருவாகியுள்ளதுடன், எமது முஸ்லிம் சமூகத்தினை ஏனைய சமூகத்தினர் சந்தேகம் கொண்டு பார்க்கின்ற புதிய நிலமை காணப்படுகிறது. இதனால் நமது முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் மதத்தலைவர்களும் முழு முஸ்லிம் சமூகமும் வேதனைப்பட வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

இச்சந்தர்பத்தை பாவித்து நமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில இனவாதிகள் தங்களின் இனவாத நெருப்புகளை பகிரங்கமாகவே கக்கி கொண்டு இருக்கின்றனர். அதே வேலை தமிழ் தலைவர்களில் ஒரு சிலர் பகிரங்கமாக இனவாத கருத்துகளை தெரிவித்து வருவது குறித்து நாம் கவலையடைகின்றோம்.

எனவே, நம் மத்தியில் இன பேதம், கட்சி பேதம் இன்றி நமது நாட்டில் நடைபெற்றுள்ள வண்முறைகளை கண்டித்து எதிர்காலத்தில் நமது நாட்டில் இவ்வாறான கொடூர நிகழ்வுகள் நடைபெறாமல் நாம் நமது நாட்டை பாதுகாக்க வேண்டும்.

இந்த வண்முறைகள் நடைபெற்ற அடுத்த தினமே நான் எமது ஜனாதிபதி அவர்களுக்கு நமது நாட்டில் பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்டது போல் போதைப்பொருள் கடத்த காரர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டது போல் 10 வருடங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நமது நாட்டு மக்களை  அச்சமடைய வைத்த வண்முறை நிகழ்வுகளுக்கு எதிராக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நமது நாட்டில் வாழும் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழும் சூழ்நிலையும் ஏற்படுத்துவதுடன், நமது நாட்டில் இனவாதங்கள் இல்லாமல் செய்வதற்கான அவசர ஏற்பாடுகளையும்  மேற்கொள்ளுமாறு எனது அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளேன்.

அன்மையில் அம்பாரை மாவட்டத்தில் வண்முறை குழுவினரிடம் இருந்து சிக்கிய வெடிகுண்டுகள், ஏணைய பொருட்கள் ஊடாக முழு கிழக்கு மாகாணத்தையும் நோக்காகக் கொண்ட செயல்பாடுகளை அறிந்த போது நாம் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளோம் கிழக்கு மாகாண மக்களின் நிலமை இப்படி என்றால் வட - கிழக்கு மாகாணங்களுக்கு  வெளியில் பெரும்பான்மை மக்களுடன் சிதறி வாழும் நமது முஸ்லிம் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதனை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வீண்வதந்திகளை பரப்பி இனகலவரத்தை உருவாக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றனர். எனவே, நமது மக்களும், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், அரச உயர் அதிகாரிகள் இணைந்து இந்த விடயத்தில் புரிந்துணர்வோடு செயல்பட்டு நமது மக்களை வழி நடத்த வேண்டிய பாரிய பொறுப்பு நம் எல்லோருக்கு;ம உள்ளது எனத் தெரிவித்தார்.
Read More
Sifnas Hamy

பயங்கரவாத குழுவின் முழுதையான தொடர்புகளையும் கண்டறிந்தது சி.ஐ.டி.



உயிர்த்த ஞாயிறன்று  தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற மொஹம்மட் சஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழுவின் அனைத்து  தொடர்புகளும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த தொடர்புகள் குறித்து முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனால் பல முக்கிய கைதுகள் சாத்தியப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த ஒழுங்கமைக்கப்பட்ட  பயங்கரவாத குழுவை பலவீனப்படுத்தி விட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசெகர சுட்டிக்காட்டினார். 
பயங்கரவாதிகளின் அனைத்து தொடர்புகளையும் நாம் தற்போது விசாரணைகளில்  முழுமையாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளோம்.  அவர்களை முழுமையாக நாம் பலவீனப்படுத்திவிட்டோம். சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி. குழுவினர் முன்னெடுக்கும் விசாரணைகள் மிக வெற்றிகரமாக இடம்பெறுகின்றன.
யாரும் வீணாக வதந்திகளை நம்பி அஞ்ச தேவை இல்லை. நாம் பாதுகாப்பை உறுதிசெய்ய முப்படையினருடன் இணைந்து  சோதனை நடவடிக்கைகளை தொடர்வோம்.  நாட்டில் பல பகுதிகளில் பல முக்கிய கைதுகள் சோதனைகளின் போது இடம்பெற்றுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் நாடளவைய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட  நடவடிக்கைகளில் பல முக்கிய கைதுகள் இடம்பெற்றன. 
தெஹிவளை கைதுகள்
தடைசெய்யப்பட்ட ஜமாத்துல் மில்லதுல் இப்ராஹீமீய்யா அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கம்பளையில் கைது செய்யப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான முக்கிய சந்தேக நபர்களான சாதிக் அப்துல்லாஹ் சாஹித் அப்துல்லாஹ் ஆகிய இருவரையும்  விசாரணைக்குட்படுத்தியதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகவே இம் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை - கவ்டான பகுதியின் ஹில் வீதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.  பொறியியலாளர் ஒருவர், நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகார தரத்தில் சேவையாற்றும் ஒருவரும் சமயல் காரர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.
கோட்டே மாநகர சபை உறுப்பினரும் சகோதரரும் கைது
கோட்டே மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி தேசியப்பட்டியல் உறுப்பினர்  ஹாஜா மிஹிதீன் அலி உஸ்மான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் வெலிக்கடை பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சோதனைகளின் போது கைது இவர்கள் செய்யப்பட்டுள்ளார். 
மூன்று வாள்கள், கத்தி,  இரு தொலைபேசிகளுடன் அவர்கள் நாவல வீதி, பள்ளிவாசலுக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின்போது கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.
இவர்கள் தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் மாநகர சபை உறுப்பினரின் வீட்டிலேயே சோதனைகள் இடம்பெற்றதாகவும் பொலிசார் கூறினர்.
கட்டுபொத்த
கட்டுபொத்தை அலஹிட்டியாவ பகுதியில் 25 ஏக்கர் காணியில் அமைந்துள்ள தனி வீடொன்றில் இருந்து 4 வாள்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் அங்கு இருக்காத போதும், சந்தேகத்துக்கு இடமான குறித்த வீடு தொடர்பில் இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.
கணகராயன் குளத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்
வவுனியா - யாழ். வீதியில் கணகராயன் குளம் பகுதியில் உள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றின் பின்னால் வைத்து இராணுவத்தினர் பயன்படுத்தும் அழுத்தக் குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டலின் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதுக்கையில் இளைஞர் கைது
பாதுக்கை பொலிஸ்  பிரிவில்  வாடகை வீடொன்றில் வசித்த 28 வயது இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன் அவரது வீட்டை சோதனை செய்த போது 6 இராணுவ சீருடைகள் 8 தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
அத்துடன் வீட்டிலிருந்த திருகோணமலை பகுதியை பதிவாக கொண்ட லொறியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டுள்ளது. 
சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்த ஆசிரியர் கைது
கற்பிட்டி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முஸ்லிம் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  
அவரிடம் இருந்து மடிக்கனினி இன்றும் நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் மீட்டுள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெலிமடை சுற்றிவளைப்பு
வெலிமடை - சில்மியாபுர பகுதியில் பொலிசார் முன்னெடுத்த சோதனைகளின்போது வீடொன்றிலிருந்து 35 மீட்டர் நீளமான  குண்டு வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் நூல் கைப்பற்றப்பட்டுள்ளது. 
அது தொடர்பில் 59 வயதான அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
டெட்டனேட்டர்களுடன்  அமைச்சர் ஒருவரின் முன்னாள் செயலர் கைது
பிரபல அமைச்சர் ஒருவரின் முன்னாள் செயலர் ஒருவர் 6 டெட்டனேட்டர்களுடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வெலிமடையில் சிக்கிய தெளஹீத் உறுப்பினர்
தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் எனக் கருதப்படும் நபர் ஒருவர் வெலிமடை - பொரகஸ் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  
ஒரு கோடியே 48 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தொகையுடன் அவர் இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார். 
வீட்டை சோதனைச் செய்தபோது வாளி ஒன்றுக்குள்ளும் பெட்டி ஒன்றுக்குள்ளும் இந்த பணம் சந்தேகத்துக்கு இடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. சந்தேக நபருக்கு எதிராக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க பொலிசார் அவதானம்ச செலுத்தியுள்ளனர்.
பொலன்னறுவையில் சிக்கிய தேடப்பட்ட லொறி
பொலன்னறுவை - புலஸ்திபுர பொலிஸ் பிரிவில் சுங்காவில பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த சந்தேகத்துக்கிடமான லொறியொன்றினை பொலிசார் கைப்பற்றினர். 
இ.பி. பி.எக்ஸ். 23991 எனும் இலக்கத்தைக் கொண்ட டிமோ ரக லொறியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
காத்தான்குடி பகுதியில் ஒருவருக்கு சொந்தமான இந்த லொறி இரு மாதங்களுக்கு முன்னர் சுங்காவில நபருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் லொறியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்களுடன் இந்த லொறி தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ள நிலையில் இந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது. 
இந்த சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  தம்மிக வீரசிங்கவின் கீழ் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
யாழ். பள்ளிவசலில் மீட்கப்பட்டுள்ள இராணுவ சீருடை 
யாழ். அல்லைப்பிட்டி பகுதியில்  உள்ள பள்ளிவாசலில் இருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் ஜகட் ஒன்றும் கொமோண்டோ படையினர் பயன்படுத்தும் ஒரு வகை கவசமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்து ரீ 56 ரக துப்பாக்கிக்கு பயன்படும் இரு தோட்டகளும் மீட்கப்பட்டுள்ளன.
கலபிந்துனுவெவ சோதனை :
கலன்பிந்துனுவெவ பகுதியில் பொலிசார் முன்னெடுத்த சோதனையில் சிப்புக் குளம் பகுதியில் ஒருவர் 3 மீட்டர் நீளமான வாளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.
வாரியபொலவில் சிக்கிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள்
வாரியபொல - பண்டார கொஸ்வத்த பகுதியில்  பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த சோதனைகளில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நல்வர் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள் என பொலிசார் கூறினர்.  
150 இற்கும் மேற்பட்ட பொலிஸ், இராணுவத்தினர்  வீடுகள் பள்ளிவாசல்களை இதன்போது சோதனை செய்துள்ளனர். இதன்போது அங்கிருந்து  கடும்போக்கு கருத்துக்கள் அடங்கிய இருவெட்டுக்கள்,  கையேடுகள், மடிக்கணினி, வாள் கத்தி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது பயங்கரவாத தாக்குதலில் தற்கொலை தரைகள் பயன்படுத்திய வேன் கெக்கிராவையில் சிக்கியது
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அங்கு பாதுகாப்பு தரப்பினரை இலக்குவைத்து தாக்குதல் நடத்திய பின்னர் குண்டுகளை வெடிக்க வைத்து தர்கொலை தககுதல் நடத்தினர். 
இவ்வாரு அங்கு பதுங்கியிருந்ததாக கருதப்படும்,  உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சகோதரர்களான ரில்வான், சைனி உள்ளிட்டவர்கள் அவ்வீட்டுக்கு செல்ல பயன்படுத்திய வேன் பாதுகாப்பு தரப்பினரால் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வேனில் பயங்கரவாதிகள் அவ்வீட்டுக்கு வெடிபொருட்களுடன் வந்ததாக பொலிசார் சந்தேகிக்கும் நிலையில், அவ்வேனை கெக்கிராவை - மருதன்கடவல இஹல புளியன்குளம் பகுதியில் வைத்து கைப்பற்றினர். 250 - 5680 எனும் குறித்த வேனின் சாரதியாக கடமையாற்றிய அபுசாலி நசார் என்பவரையும் இதன்போது கெக்கிராவை பொலிசார் கைதுசெய்தனர்.
கல்முனை பொலிஸ் அத்தியட்சருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  அந்த தகவல் கெக்கிராவ பொலிஸ் பொறுப்பதிகரைக்கு கொடுக்கப்பட்டு அதனூடாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
கெக்கிராவை பகுதியில் உள்ள மெளலவி ஒருவர் தனக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமையவே அவர்களை சாய்ந்தமருதுக்கு அழைத்து சென்றதாக சாரதி பொலிசாரிடம் கூறியுள்ள நிலையில் குறித்த மெளலவியைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சஹ்ரானின் நெருங்கிய சக கைது
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானின் மிக நெருங்கிய சக ஒருவர் கல்முனை - மருதமுனை அஷ்ரப் வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.  
சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என கருதப்படும் குறித்த சந்தேக நபரிடம் இருந்து சந்தேகத்துக்கிடமான 3 புத்தகங்கள்,  சிம் அட்டை, தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் ஐ.எஸ். ஐ.எஸ். ஆதரவாளர் கைது
அம்பாறையில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதரவாளராக செயற்பட்டதாக நம்பப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ். தலைவர்கள், தொடர் குண்டுவெடிப்பு காணொளிகள் என்பவற்றை பலருக்கு தொலைபேசியில் பதிவேற்றிக் கொடுத்துள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
வவுனியா, மன்னார் சுற்றிவளைப்புக்கள்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தககுதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் வடக்கில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், வடக்கில் தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி வவுனிய மாவட்டத்தில் இராணுவம் முன்னெடுத்த சோதனைகளில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மன்னாரில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதான சஹ்ரானின் ஊடக செயலர்
உயிர்த்த ஞாயிறு  தற்கொலை தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் ஊடக செயலராக செயற்பட்ட ஒருவரை மதவாச்சி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  மதவாச்சி, தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த அப்துல் லதீப் மொஹம்மட் என்பவரையே இவ்வாறு கைதுசெய்துள்ள மதவாச்சி பொலிசார், அவரை அனுராதபுரம் நீதிவான்  ஜானக பிரசன்ன சமரசிங்க முன் ஆஜர்செய்து 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
6 பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரின் மனைவி 7 ஆவது பிரசவத்துக்காக காத்திருந்தபோது, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் காத்தான்குடி தேசிய தெளஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டாளராக இருந்துள்ளதாகவும் பொலிசார் கூறினர்.  
மின்சார தொழில் நுட்ப உத்தியோகத்தரான குறித்த சந்தேக நபர்,  மொஹம்மட் சஹ்ரானின் ஊடக செயலராக செயற்பட்டுள்ளமை  ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
இந் நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடமேல், வட மத்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன, அனுராதபுரம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் செனரத் பிரதாப் சந்துன்கஹவல,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் திலின ஹேவா பத்திரன அகியோரின் மேற்பார்வை ஆலோசனையின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கிழக்கு ஆளுநர் அலுவலக சேவையாளர்கள் கைது
இதைடையே காத்தான்குடி - ரெலிகொம் வீதியில் விஷேட சுற்றிவளைப்பு இடம்பெற்றது. இராணுவத்தினருடன் இணைந்து  முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின்போது,  அப் பகுதியில் இருந்த அரசியல் அலுவலகம் ஒன்று சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்து ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 48 கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அங்கிருந்த கிழக்கு ஆளுநர் அலுவலகத்தின் கீழ் சேவையாற்றிய என்.எஹ்.எம். கரீம், எம்.ரி. நசார் என அறியப்படும் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
அவர்களிடம் கிழக்கு ஆளுநர் அலுவலக அடையாள அட்டையும் இருந்துள்ளது.
சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கு வீடு வாடகைக்கு கொடுத்தவர் கைது
சாய்ந்தமருது வொலிவேரியன் குடியிருப்பு பகுதியில் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வீட்டை பயங்கரவாதிகளுக்கு  வாடகைக்கு கொடுத்த நபரை அம்பாறை பொலிசார் கைது செய்து 72 மணிநேரம் தடுப்புக் காவலில் தடுத்து விசாரித்து வருகின்றனர்.  
அப்துல் மஜீத் ஆதம் லெப்பை என்பவரையே பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தெளஹீத் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் மூவரின் கைது
தேசிய தெளஹீத் ஜமாத்தின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் மிரிஹானை விஷேட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மிக முக்கிய நபர்களாக கருதி தேடப்பட்டு வந்த கல்கிசை,  இரத்மலானை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவர்களிடமிருந்து 4 மடிக் கணினிகள், 5 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரு தெளஹீத் ஜமாத்தினரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கொட்டாஞ்சேனை – மெசஞ்சர் வீதியில் கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டு சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில், சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியதையடுத்து தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 2 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து இருவெட்டுகளும், மடிக்கணினியும், கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எப்.எம்.பஸீர் 
Read More
......