Tamil Sri Admin

சிறுமி துஷ்பிரயோகம் : பொலிசாருக்கு எதிராக முறைப்பாடு


மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என முறையிடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் பக்கசார்பாக நடந்து கொள்வதாகவும் சாட்சிகளை பொலிசார் அச்சுறுத்துவதாக பொலிசாருக்கு எதிராக ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே. மகேஸ்வரன், உதவி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் தரம் 10 ஆண்டு மாணவி ஒருவர் குறித்த பாடசாலையில் இடம்பெற்று வரும் பிரத்தியேக வகுப்பிற்கு கடந்த 24 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சென்று தனிமையில் இருந்துள்ளார். 

இந்தநிலையில், வீதியால் சென்ற மீன் வியாபாரி ஒருவர் பாடசாலைக்குள் நுழைவதை அவதானித்த சிறுமி வகுப்பறையில் இருந்து வெளியே வந்து என்ன என்று வினாவிய போது குடிப்பதற்கு தண்ணீர் தேவை என கேட்டுள்ளார். 

இதன்போது, சிறுமி தண்ணீர் அருகில் இருப்பதாக தெரிவித்த போது சந்தேகநபர் சிறுமியை நோக்கி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார். 

இந்தநிலையில், அவரிடம் இருந்து தப்புவதற்காக போராடிக் கொண்டிருந்த போது அங்கு பாடசாலைக்கில் அருகாமையில் இருந்த ஒருவர் பாடசாலைக் கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்ற போது சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு சென்றுள்ளார். 

இதனையடுத்து, குறித்த மீன் வியாபாரி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

இதுபற்றி, பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தநிலையில், சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாமல் பொலிசார் அசமந்த போக்கில் செயற்பட்டு வருவதாகவும் இவ் சம்பவம் தொடர்பாக சாட்சி தெரிவித்த இருவரை பொலிசார் அச்சுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர். 

ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரனிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் குறித்த பாடசாலை மற்றும் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து பொலிசார் பக்க சார்பாக செயற்படுவதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்யுமாறு கோரி பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

Tamil Sri Admin

About Tamil Sri Admin -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :
......