Tamil Sri Admin

எனது சாரதியாக இருந்தாலும் பொலிஸாரின் கடமையை தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே! நான் அதில் தலையிடவில்லை


ஒரு குழுவினரின் காட்டு மிராண்டித்தனமான கொடுமையான செயற்பாடுகளால் முழு முஸ்லிம்களையும் இந்த அரசுதீவிரவாதிகளாக பார்க்கவில்லை. இதனால் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றும், சம்பந்தப்பட்ட தீவிரவாதக்கும்பல்களை கண்டுபிடிப்பதற்காகவே இராணுவத்தினரும், பொலிஸாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதற்குநாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.



உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டைமேற்கொள்ளப்படுகின்றமையும், அதனால் மக்கள் குழப்பத்தில் உள்ள நிலை கருதி நேற்று (2) நடாத்திய ஊடகவியலாளர்சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது,

இராணுவத்தினரும், பொலிஸாரும் சோதனைகள் செய்து வருகின்றார் என்பதற்காக குர்ஆன், கிதாப்கள் மற்றும் இஸ்லாமியபுத்தகங்களை யாரும் எரிக்கவோ அழிக்கவோ தேவையில்லை. நாம் எதற்காக இவ்வாறு செய்யவேண்டும். ஒரு சில இனவாதக்கும்பல்களின் அராஜக செயற்பாட்டால் முழு முஸ்லிம்களும் அச்சத்தில் உள்ளனர். உண்மையிலே இவ்விடயம் கவலையளிக்கிறது.

அதற்காக குர்ஆன், கிதாப்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை எரிக்க, அழிக்க வேண்டிய எந்தத் தேவையும் எமக்கில்லை. தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு அஞ்சி ஒருபோதும் எமது மதத்தின் அடிப்படை செயற்பாடுகளை யாரும் கைவிடாதீர்கள்.தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை நூறு வீத முஸ்லிம்களும் கண்டிப்பதுடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புட்டவர்களைஇனம் காட்டியுள்ளனர்.

அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமாயின் அதற்காக குரல்கொடுக்க நானும் எமது முஸ்லிம் காங்கிரஸூம் தயாராக உள்ளோம். இந்நாட்டின் ஒற்றுமைக்கும், இன ஐக்கியத்திற்கும் முஸ்லிம் சமூகம் பெரும் பங்களிப்பினைச் செய்துள்ளது.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர் எனது சாரதியாக இருந்தாலும்கூட பொலிஸார் அவர்களின் கடமையை தங்குதடையின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளாது உள்ளேன். பாழடைந்த காணியில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களும், அருகில் சட்ட ரீதியாக வெடிபொருள் வைத்திருந்தவரின்வெடிபொருட்களையும் சேர்த்தே காட்டப்பட்டுள்ளது.

பாழடைந்த காணியின் எதிர் வீடுதான் எனது சாரதியின் தாயாரின் வீடாகும். தனது தந்தைக்கு சுகமில்லை என்பதாலேயே தாய் வீட்டில் சாரதி இருந்துள்ளார். நேற்று மதியம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எனது சாரதி கடுமையான விசாரணைகளுக்குப் பிறகு நேற்றிரவுசம்மாந்துறைப் பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளார்.

தனது வாக்கு மூலத்தில் தனக்கும் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெவித்துள்ளார். அந்த வகையில் அவரது உண்தை்தண்மைஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என நான் நம்புகின்றேன்.

இவ்வாறு விடயங்கள் இருக்கின்றபோது இனவாத ஊடகங்கள் என்னையும் தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிடுகின்றது. இதுமிகவும் கவலைக்குரியதாகும்.

அது மட்டுமல்லாது, சாய்ந்தமருதில் இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இறந்துபோன பெண் மற்றும் காயமடைந்த பொதுமக்களை பார்வையிடுவதற்காகவும், ஜனாஸாவை கொண்டு வரும்செயற்பாட்டிற்காகவும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நண்பர் ஜெமீலின்அழைப்பின் பேரில் அம்பாரை போதனா வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். அப்போது நோயாளர்களைப் பார்வையிடுவதற்கான நேரம் இன்னும் அரை மணித்தியாலயம் இருப்பதால் உரிய நேரத்திற்குசென்று பார்வையிடுமாறு எமக்கு சொல்லப்பட்டது. அத்துடன் எம்மோடு வைத்தியசாலைக்கு வந்த சாய்ந்தமருது பொதுமக்களைபல கேள்விகளை கேட்டு சங்கடத்திற்குள் ஆளாக்கினர்.

நான் அந்த இடத்துக்ச் சென்று அவர்கள் வந்த நோக்கத்தைதெளிவுபடுத்தினேன். அவ்வாறு செய்த விடயத்தைக்கூட அதுவும் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன் என்ற விடயம் தெரிந்தும் என்னையும் சேர்த்து வேறுவிதமாகத்தான் பார்க்க முற்பட்டனர்.

இதன் காரணமாக வைத்தியாசலையை விட்டு வெளியேறிவிட்டோம். சம்பவம் இப்படியிருக்க, தற்கொலைத் தாக்குதலுடன்தொடர்புட்ட சஹ்ரானின் மனைவியைப் பார்க்கப் போனதாகக் கூறி மிகப் பெரிய அப்பட்டமான பொய்ச் செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக எனது சட்டத்தரணிகளுடன் ஆலோசித்துவருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களோடு மக்களாக நின்றுகொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் வாழ்க்கை நிலையை வழமையான நிலையைக் கொண்டு வரவேண்டிய பாரிய பொறுப்பு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்குள்ளது.

இவ்வாறு செய்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது அபாண்டங்களையும், பொய்களையும் சொல்லி தீவிரவாதத்துடன்தொடர்புபடுத்த சில ஊடகங்கள் முற்படுகின்றது. அது மாத்திரமல்ல சில அரசியல்வாதிகளும் முற்பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். இது சமூகத்தின் மீதான பிரச்சினை இந் நேரத்தில் முழுநாட்டிலுமுள்ள அனைத்து முஸ்லிம்களும் அச்சத்தில் உள்ளனர்.

அவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் யார் குற்றவாளியானாலும்தண்டிக்கப்படல் வேண்டும், யார் தீவிரவாதியானாலும் அழிக்கப்படல் வேண்டும். அதே போன்று எமது பெண் பிள்ளைகளின் ஆடைகளில் கட்டுப்பாடுகள் சில நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகஅறிகின்றேன். அதற்காக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்து உரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்.

 மேலும், சம்மாந்துறை பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது மக்கள்ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள். நானும் வேறு எந்த பகுதிகளுக்கும் செல்லாது மக்களோடு மக்களாக நின்று அவர்களதுசிரமங்களில் பங்கேற்று வருகின்றேன். எனது மக்களை எவ்விதத்திலும் நான் இச்சந்தர்ப்பத்தில் கைவிட்டு எந்த ஒரு வெளிஇடங்களுக்கும் செல்ல மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

 மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் பாதுகாப்பு தரப்பினரால் ஏற்பட்டால் என்னை அவசரமாக தொடர்பு கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றேன். தற்போதுள்ள நிலைமையில் பொலிஸார் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு சோதனைகளுக்குபிரதேச மக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன் மூலமே இவ்வாறான தீவிரவாத்தை முற்றாகத்துடைத்தெறிய முடியும் என மேலும் அவர் தெரிவித்தார். 

மீனோடைக்கட்டு நிருபர் 
பைஷல் இஸ்மாயில்

Tamil Sri Admin

About Tamil Sri Admin -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :
......