Sifnas Hamy

நமது நாடும், முழு முஸ்லிம் சமூகமும் அச்சமும், வேதனையும் அடையும் நிலமை உருவாகி உள்ளது.

அண்மையில் வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து ஒரு குழுவினர் மேற்கொண்ட காட்டுமிராண்டி தனமான செயற்பாடுகளினால்  நமது நாடும் நமது முழு முஸ்லிம் சமூகமும் அச்சமும், வேதனையும் அடையும் நிலமை உருவாகியுள்ளது.


இந்த நிலமையில் முஸ்லிம் சமூகம் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயற்பட்டு, ஏனைய சமூகங்களுடன் புரிந்துணர்வோடு வாழ்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அக்கரைபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. பண்டார, பிரதேச பள்ளி வாசல் தலைவர்கள், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண  சூழ்நிலை தொடர்பாக நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

நமது நாட்டில் 3 தசாப்த காலமாக நடைபெற்ற யுத்த சூழ்நிலையில் இருந்து நமது நாடும் நாமும் விடுதலைபெற்று அமைதியாக வாழ்ந்து வரும் கால கட்டத்தில் அண்மையில் நமது நாட்டில் இடம்பெற்ற மிலேச்சதனமான செயற்பாடு காரணமாக நமது நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், முஸ்லிம் சமயத் தலைவர்களும் கூட்டுத் மொத்தமாக மண்ணிப்பு கோர வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற தாக்குதல்களினால் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பலியான சூழ்நிலையில் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மிக பொறுமையுடனும், மனிதாபிமானத்துடனும் தெரிவித்த கருத்துகளினால் இனங்களுக்கிடையில் ஏற்படவிருந்த பாரிய இனமோதல்கள் தடைசெய்யப்பட்டன. இதற்காக நாம் கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கையின் வரலாற்றில் நமது நாட்டுக்காகவும், சுதந்திரத்திற்காகவும், ஒருமைபாட்டுக்காகவும், சமாதானத்திற்காகவும் வரலாற்று தியாகங்களை நமது முஸ்லிம் சமூகம் வழங்கியதுடன், பெரும்பான்மை சமூகங்களுடனும், ஏனைய சமூகங்களுடனும் ஐக்கியமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகத்தினை சில தீய சக்திகளின் செயற்பாடுகளினால் பூச்சியமாக்கப்பட்ட புதிய நிலமையும் உருவாகியுள்ளதுடன், எமது முஸ்லிம் சமூகத்தினை ஏனைய சமூகத்தினர் சந்தேகம் கொண்டு பார்க்கின்ற புதிய நிலமை காணப்படுகிறது. இதனால் நமது முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் மதத்தலைவர்களும் முழு முஸ்லிம் சமூகமும் வேதனைப்பட வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

இச்சந்தர்பத்தை பாவித்து நமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில இனவாதிகள் தங்களின் இனவாத நெருப்புகளை பகிரங்கமாகவே கக்கி கொண்டு இருக்கின்றனர். அதே வேலை தமிழ் தலைவர்களில் ஒரு சிலர் பகிரங்கமாக இனவாத கருத்துகளை தெரிவித்து வருவது குறித்து நாம் கவலையடைகின்றோம்.

எனவே, நம் மத்தியில் இன பேதம், கட்சி பேதம் இன்றி நமது நாட்டில் நடைபெற்றுள்ள வண்முறைகளை கண்டித்து எதிர்காலத்தில் நமது நாட்டில் இவ்வாறான கொடூர நிகழ்வுகள் நடைபெறாமல் நாம் நமது நாட்டை பாதுகாக்க வேண்டும்.

இந்த வண்முறைகள் நடைபெற்ற அடுத்த தினமே நான் எமது ஜனாதிபதி அவர்களுக்கு நமது நாட்டில் பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்டது போல் போதைப்பொருள் கடத்த காரர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டது போல் 10 வருடங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நமது நாட்டு மக்களை  அச்சமடைய வைத்த வண்முறை நிகழ்வுகளுக்கு எதிராக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நமது நாட்டில் வாழும் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழும் சூழ்நிலையும் ஏற்படுத்துவதுடன், நமது நாட்டில் இனவாதங்கள் இல்லாமல் செய்வதற்கான அவசர ஏற்பாடுகளையும்  மேற்கொள்ளுமாறு எனது அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளேன்.

அன்மையில் அம்பாரை மாவட்டத்தில் வண்முறை குழுவினரிடம் இருந்து சிக்கிய வெடிகுண்டுகள், ஏணைய பொருட்கள் ஊடாக முழு கிழக்கு மாகாணத்தையும் நோக்காகக் கொண்ட செயல்பாடுகளை அறிந்த போது நாம் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளோம் கிழக்கு மாகாண மக்களின் நிலமை இப்படி என்றால் வட - கிழக்கு மாகாணங்களுக்கு  வெளியில் பெரும்பான்மை மக்களுடன் சிதறி வாழும் நமது முஸ்லிம் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதனை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வீண்வதந்திகளை பரப்பி இனகலவரத்தை உருவாக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றனர். எனவே, நமது மக்களும், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், அரச உயர் அதிகாரிகள் இணைந்து இந்த விடயத்தில் புரிந்துணர்வோடு செயல்பட்டு நமது மக்களை வழி நடத்த வேண்டிய பாரிய பொறுப்பு நம் எல்லோருக்கு;ம உள்ளது எனத் தெரிவித்தார்.

Sifnas Hamy

About Sifnas Hamy -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :
......