தீவிரவாதம், பயங்கரவாதம் முழுமையாக நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ புலி பயங்கரவாதத்தை ஒழித்தார். ஆனாலும் முஸ்லிம்களுக்கெதிராக பேசும் தமிழ் தீவிரவாதம் இன்னமும் உள்ளது.
கருணா, கோடீஸ்வரன், வியாழேந்திரன், சுமந்திரன், மனோ கணேசன் உட்பட தமிழ் கூட்டமைப்பினர் இன்னமும் முஸ்லிம்களுக்கெதிரான தீவிரவாதமாக பேசுகிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
அதே போல் புலிகளை ஒழித்த மஹிந்தவால் சில சிங்கள அரசியல் மற்றும் சமயத்தலைவர்களின் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் உருவாகுவதை தடுத்திருக்கலாம்.
தம்புள்ள போன்ற பள்ளிவாயல் தாக்கப்பட்டு அளுத்கம அப்பாவி முஸ்லிம்கள் அடிவாங்கியது சிங்கள தீவிரவாதமாகும்.
அதே போல் ரணில் தலைமையிலான இந்த அரசும் அதே தவறை செய்து கண்டியிலும் பெந்தோட்டையிலும் சிங்கள தீவிரவாதத்தின் அநியாயத்தை பார்த்துக்கொண்டிருந்தது.
அன்று ஹிஸ்புல்லா, தலைவர் ரிசாத் போன்றோர் அடித்துக்கூறினர். தூங்கிகொண்டிருக்கும் முஸ்லிம் வாலிபர்களை தட்டியெழுப்ப வேண்டாம் என. ஆனாலும் அரசு தீவிரவாதம் வளர துணை போனது.
தீவிரவாதம் என்பது இன்று நாட்டில் அனைத்து மத மக்கள் மத்தியிலும் வளர்ந்து விட்டதை காண்கிறோம். ஒவ்வொரு சமூகமும் அடுத்த சமூகத்தை தப்பான கண்ணோட்டத்திலும் கோபத்திலும் பார்க்கிறது. சமூக வலையத்தளங்களில் மிக மோசமான தூஷண வார்த்தைகளால் ஏசிக்கொண்டிருக்கிறது. இதில் சிங்கள வாலிபர் முதலிடத்திலும் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் இரண்டாம் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இந்நிலையை மாற்றும் பொறுப்பு அரசின் கையில் உள்ளது. எந்தவொரு சமூகத்தையும் அல்லது மதத்தையும் தூசண வார்த்தையால் (தம்பிலா, சோனி, பறத்தமிழா) போன்ற வார்த்தைகளால் எழுதினால் அவர்கள் எவராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு பகிரங்க பிரம்படி கொடுக்க வேண்டும்.
இலங்கை மக்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற கருத்தரங்குகளை நடாத்த பௌத்த சமயத்தலைவர்கள் முன் வந்து சிறுபான்மை இளைஞர்கள் மத்தியில் அன்பை விதைத்து விரோதத்தையும் விரக்தியையும் வளர்க்க முன் வர வேண்டும். சிங்கள பெரும்பான்ம திருந்தினால் அவர்கள் மத்தியில் உள்ள பெரும்பான்மை என்ற தீவிரவாத சிந்தனையை ஒழித்து அனைவரும் இலங்கை மக்கள் என்ற வகையில் நடந்தால் எதிர் காலத்தில் தீவிரவாதம் இல்லாத நாட்டை நாம் கட்டியெழுப்பலாம்.
முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி.