![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgluQy4dKGrTU9r7ziHi93HlC2-zffUEIE2Q38d3vB8MdQbpJUuxHbtBF7nehSVz2cXUSSX7_7HdIN-U29Acg5l4eo4fNkUTcuOYrfRRhrCSCtWu_ZSDD2wNUEG5hp9rMnVcd6QLAbiT68/s1600/IMG_ORG_1555849295265.jpeg)
நாட்டில் காலை முதல் இதுவரையில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 27 வெளிநாட்டவர்கள் உட்பட 228 பேர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எட்டு இடங்களில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இச்சம்பவங்களில் சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.
மூன்று தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள், தெஹிவளை மற்றும் தெமட்டகொட ஆகிய இடங்களிலேயே வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகம்பு-104, கொழும்பு -66, மட்டக்களப்பு-28, தெஹிவலை - 02 என்றவாறு இதுவரை பலியாலோர் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.