அனைத்துப் பாடசாலைகளும் நாளை, நாளை மறுதினம் மூடப்படும்நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (22ஆம் திகதி) மற்றும் நாளை மறுதினமும் (23ஆம் திகதி) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டை அடுத்து இரண்டாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்றுள்ள தொடர்குண்டு வெடிப்புகளை அடுத்து  நாளை திங்கள் நாளை மறுதினம் செவ்வாய் ஆகிய தினங்களில் சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.