வெட்கம் என்பது கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டிருந்தால், மகிந்த ராஜபக்ச இன்றே பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது இன்று உறுதியானது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற விவகார தெரிவுக்குழுவின் பெரும்பான்மை அங்கத்துவத்தை தீர்மானிக்க நாடாளுமன்றத்தில் இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், உறுப்பினர்களை நியமிக்கும் யோசனைக்கு ஆதரவாக 121 வாக்குகள் கிடைத்ததாக ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ச டி சில்வா தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.