ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளரும், ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (18) அவரது இல்லத்தில் சந்தித்து, தற்போதைய அரசியல் களநிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது, ஐ.நா. நல்லிணக்கத்தும் அபிவிருத்திக்குமான ஆலோசகர் கிட்டா சப்ஹர்வால் உடனிருந்தார். இங்கு கருத்து தெரிவித்த ஸ்ரீ.ல்.மு.காங்கிரஸ் தலைவா்
இன்று பி்.பகல் நடைபெறும் சர்வகட்சி மாநாட்டுக்கு காலை ஜனாதிபதி தெடா்பு கொண்டு அழைப்பு விடுத்தாா். அதற்கமையவாக தான் கலந்து கொள்வதாகவும் அத்துடன் பிரதமா் மகிந்த ராஜபக்சவினை தெடா்பு கொண்டு அவரின் இன்று பிரந்த நாளுக்கு வாழ்த்து தெரவித்தாகவும் தெ்ரிவித்தா்ா. இந்த நாடடி்ன் நிலவும் அரசியல் நிலவரம் பற்றி சர்வதேச சமுகம் அறிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கின்றது இன்று என்னை சாந்தித்த ஜக்கிய நாடுகள் பிரநிதிகள் குழு அதுபற்றி கலந்துரையாடியது.
இந்த நாட்டின் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு இந்த நாட்டின ஜனாதிபதி என்ற வகையில் அவா் ஒரு சுகுமான தீா்வைக் காணல் வேண்டும். அத்துடன் இந்த நாட்டின் பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் அந்த சபையின் மதிப்பையும் நாம் பாதுகாத்தல் வேண்டும். சில அருவருத் தக்க செயல்கள் பாாராளுமன்றத்தில் கடந்த வாரங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள் இனிமேலும் நடக்காது ஒரு ஒழுக்க விழுமியத்துடன் மக்கள் பிரநிதிகள் நடந்து கொள்ளல் வேண்டும். அத்துடன் ஜக்கிய தேசிய முன்னணி என்ற வகையில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டிலேயே உள்ளோம். அதில் எவ்வித மாற்றமுமில்லை. அரசியலுக்கு முரனாண அரசாங்கள் நியமிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. பெரும்பாண்மையை நிறுபீத்துள்ள கட்சிக்கு ஆட்சி அதிகாரங்களை வழங்குதல் வேண்டும் எனவும் அமைச்சா் ரவுப் ஹக்கீம் தெரிவித்தாா்.