மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசணையின் கீழ், கொழும்பு நகரில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை இரவு நேரத்தில் அகற்ற, கொழும்பு மா நகர சபை தீர்மானித்துள்ளது. மா நகர சபை ஊழியர்கள் இதற்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

இந்த வேலைத் திட்டத்தின் மூலம்,  கொழும்பு மா நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் நிலவும் குப்பைப்  பிரச்சனைக்குத்  தீர்வு காண முடியும் என்று, அமைச்சர் பைஸர் முஸ்தபா  தெரிவித்துள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )