நடந்து முடிந்த/நடந்து கொண்டிருக்கிற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் மிகத் திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேறுவதை நாமெல்லோரும் அவதானித்தோம்.

இலங்கையை பாதுகாக்க வேண்டும் என்பதும், தூய பௌத்த நாடாக்க வேண்டும் என்பதும் அவர்களில் சிலரது வாதங்களாயினும் உண்மையில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நிலை குலைய வைக்க வேண்டுமென்ற உள்நோக்கமே மேலோங்கியிருக்கிறது என்பது கண்கூடு.

அப்படி முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் கை வைக்க முயற்சித்ததன் விளைவு, எமது நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் காணத்துவங்கியிருப்பது வெள்ளிடைமலை.

ஆக, ஒரு சமூகத்தின் மீதான தாக்குதல்கள் நாட்டின் நிலைபேறான ஸ்திரத்தன்மைக்கு ஆப்பாக மாறியிருக்கிறது என்றால், இதுவா உங்கள் தேசப்பற்று? இதுவா உங்கள் மதப்பற்று? இது தேசத்துக்கு நீங்கள் இழைக்கும் பாரிய அநீதி இல்லையா?

உதாரணத்துக்கு நான் இங்கே இலங்கை பங்குச்சந்தையின் அனைத்து விலைப் பங்குச் சுட்டெண் (ASPI), இருபது முன்னணி நிறுவனங்களின் பங்குச் சுட்டெண் (the Standard & Poor's Sri Lanka 20) மற்றும் நிறுவனங்களின் பங்குச் சந்தை நிலவரம் என்பவற்றை இணைக்கிறேன். அனைத்திலும் பாரிய வீழ்ச்சியையும், அது மெல்ல மெல்லவே பழைய நிலைக்கு மீண்டு வருவதையும் நீங்கள் காணலாம்.

அதுசரி, இவற்றையெல்லாம் விளங்கிக்கொள்ளும் அறிவு உங்களிக்கிருந்தால், இனக்கலவரமொன்றை கொடூரமாக நிகழ்த்தும் மனநிலை வாய்த்திருக்குமா?

எப்.எச்.ஏ. ஷிப்லி
விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகம்