ன வெறுப்பினை வெளிப்படுத்தும் வகையில் பேசி, வீடியோ ஒன்றினை வெளியிட்ட நபர் ஒருவருக்கு எதிராக, நேற்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘குரல்கள் இயக்கம்’ சார்பான சட்டத்தரணி ரதீப் அஹமட் உதவியுடன், கல்முனையில் இயங்கும் சிவில் அமைப்பொன்று, இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளது.
கண்டியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்த காலகட்டத்தில், கல்முனைப் பகுதியைச் சேர்ந்த நபரொருவர், பேஸ்புக் ஊடாகப் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் தோன்றி, முஸ்லிம்களுக்கு எதிராக, இன வெறுப்பினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதோடு,  கல்முனையில் அமைந்துள்ள பௌத்த விகாரையை முஸ்லிம்கள் தாக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து கல்முனையில் இயங்கி வரும், சிவில் அமைப்பொன்று, குறித்த நபருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை பதிவு செய்தது.
கலகம் விளைவிக்கக் கோரி தேவையில்லாமல் ஆத்திரமூட்டியமை, சமாதானக் கேட்டை ஏற்படுத்தும் நோக்குடன் வேண்டுமென்று நிந்தனை செய்தமை,சமய நிந்தனை செய்யும் நோக்கில் கருத்துக் கூறியமை மற்றும் மத, இன வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ், மேற்படி நபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.