கண்டி வன்முறையின் போது பாதிப்புக்குள்ளான விபரங்கள் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா, பொலிஸ் ஊடகப்பேச்சாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
கடந்த 7ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர வெளியிட்ட தகளவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலேயே குடித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கண்டி வன்முறையில் 4 பள்ளிவாசல்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டதாக குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
நேற்றைய தினம் (09.03.2018) வரை தொகுக்கப்பட்ட விபரங்களுக்கு அமைய பாதிப்புக்குள்ளான பள்ளிவாசல்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்களின் தகவல்கள் குறித்த கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது. (நு )
பாதிப்பு விபரங்கள்:

உயிரிழப்பு – 01
காயமடைந்தோர் – 12
முற்றாக சேதமாக்கப்பட்ட வீடுகள் – 62
பகுதியளவில் சேதமாக்கப்பட்ட வீடுகள் – 79
பாதிப்புக்குள்ளான பள்ளிவாசல்கள் – 17
முற்றாக சேதமாக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் – 91
பகுதியளவில் சேதமாக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் – 22
சேதமாக்கப்பட்ட வாகனங்கள் – 60
இடம்பெயர்ந்த குடும்பங்கள் – 300

Violence Caoused to Muslims n Kandy (09.03.2018)