கண்டி - திகனவுக்கு இன்று (10) விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மரணமடைந்த அப்துல் பாசித்தின் குடும்பத்தை சந்திக்காமலேயே சென்றதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்துல் பாசித்தின் சகோதரர், மௌலவி பஷால் கூறியுள்ளதாவது,

நானும், எனது குடும்பமும், ஏனைய பாதிக்கப்பட்டவர்களும் நின்றிருந்தோம், எங்களைத் தாண்டியே பிரதமர் சென்றார். ஒரு ஆறுதல் தானும் பிரதமர் கூறவில்லை.  இறந்துபோன தம்பியின் வீட்டைக்கூட பிரதமர் பார்க்கவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.