மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்தகல் கிராமத்திலுள்ள ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று மாலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.