அம்பாறை மாவட்ட மாதாந்த தர்பியா நிகழ்ச்சி எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகை முதல் இரவு 9.30 வரை சவளக்கடை, அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள 5ஆம் கிராமம் ஸபூரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வில், மார்க்கத்தை தூய்மையான வழியில் அறிந்து, தெளிந்து பயன்பெற அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)