தமிழ்ப் பேசும் இளைய தலைமுறையினரின் கலை ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில், மலேஷியாவிலிருந்து வானலை ஊடாக ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்  புதிய இசை எப்.எம். ( Isai Fm )  வானொலி சேவை, உலகளாவிய ரீதியில் மா பெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை, எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் மலேஷியாவில் நடத்தவுள்ளது. 

மலேஷியாவின் ( K.W.C. Star Xpo Fashion Mahal ) கே.டப்ளியூ.சீ. ஸ்டார் எக்ஸ்போ பெஷன் மஹாலில், இம் மாபெரும் சிறப்பு இசை விழா நிகழவுள்ளது. 

மலேஷியாவின் புதிய வானொலி சேவையான இசை எப்.எம்., இந்நாட்களில் மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில், பல்வேறுபட்ட கலை, கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இலங்கையில் மட்டுமல்லாது, சர்வதேச ரீதியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து  வருகின்றது. சர்வதேசத்தில் தமது தாய் மொழியை வளர்க்கவும், சர்வதேசத்தின் ஊடாக தமிழுக்கு நல்லதொரு வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கவும், இசை எப்.எம். அரும் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை மற்றும் மலேஷியா நாடுகளில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் இளைஞர் யுவதிகளின் கலைத் திறனை வளர்க்கும் முகமாகவும், அவர்களின் ஆற்றல்களை உலகுக்கு எடுத்துக்காட்டும் நோக்காகக் கொண்டுமே, இவ் இசை சிறப்பு நிகழ்ச்சி மலேஷியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வோருக்கு, அனுமதி  இலவசம். எனினும், முன் ஆசனப் பதிவுகளுக்கு மாத்திரம், மலேஷியா நிதியில் "99 ரிங்ஸ்" செலுத்தி, ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

mohamed mafeer