விவசாயி ஒருவரின் மனைவியுடன் தவறான உறவை மேற்கொண்டிருந்த ஒருவரது கண்களில் அமிலத்தை ஊசி மூலம் ஏற்றிய சம்பவம் இந்தியாவின் பீஹார் மானிலத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விவசாயியிடம் ட்ரெக்டர் சாரதியாகப் பணியாற்றிய 30 வயது நபருக்கும் விவசாயின் மனைவிக்கும் இடையில் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆறாம் திகதி இருவரும் ஊரை விட்டு ஓடிப் போயினர். தனது மனைவியை ட்ரெக்டர் சாரதி கடத்திச் சென்றுவிட்டதாக விவசாயி பொலிஸில் புகாரளித்தார்.
எவ்வாறெனினும் அவரது மனைவி நேற்று முன்தினம் (16) ஊர் திரும்பியதுடன் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறும் விவசாயியைக் கெஞ்சியுள்ளார்.
மனைவியை ஏற்றுக்கொண்டபோதும் சாரதியை மன்னிக்க முடியாத விவசாயி, தனது உறவினரை விட்டு, சாரதியையும் தன் மனைவியையும் சேர்த்து வைப்பதாகவும் தமது ஊர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
அதை நம்பி விவசாயியின் ஊருக்குச் சென்ற சாரதியை இருபது பேர் கொண்ட கும்பல் உணவகம் ஒன்றுக்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளது.
மேலும் சாரதியின் கண்களில் ஊசி மூலம் அமிலத்தையும் பாய்ச்சினர். இதில், சாரதியின் இரண்டு கண்களும் குருடாகின. ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

