வாழைச்சேனை - தியாவட்டவான் பிரதான வீதியில் இயங்கிவரும்  தாறுஸ்ஸலாம் அரபுக்கல்லூரியில் இம்முறை நான்கு பேர் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும், ஒருபவர் காலித் பல்கலைக்கழகத்திற்கும் உயர்கல்வியை தொடர்வதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
சவூதி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் (மதனி) அவர்களும் நிருவாகத்தினரும்  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு தெரிவு செயப்பட்டவர்களை உருவாக்குவதற்கு உதவிய, உதவுகின்ற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக அவர்களின் ஈருல வாழ்க்கையையும் இன்பமாக்கிவைப்பானாக என்கின்ற பிராத்தனையையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.