இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. தனது நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். சிறப்பாக பந்து வீசிய மலிங்கா இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். 34 வயதாகும் இவருக்கு தற்போது இலங்கை அணியில் தொடர்ச்சியாக இடம் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எதிராக விளையாடிய பின்னர், சர்வதேச போட்டியில் பங்கேற்கவில்லை.
சமீபத்தில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்காவை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மலிங்காவை மும்பை உள்பட எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்காவை ஆலோசகராக நியமித்துள்ளது. இதனால் மனதளவில் தன்னுடைய கிரிக்கெட் முடிவுக்கு வந்ததாக மலிங்கா கூறியுள்ளார்.
இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘மனதளவில் என்னுடைய கிரிக்கெட் ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டது. நான் இனிமேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. என்னுடைய சர்வதேச கிரிக்கெட் ஓய்வு குறித்து விரைவில் அறிவிக்க திட்டமிட்டு வருகிறேன்.

