ஒருவரை மலட்டுத்தன்மையடையச் செய்யக்கூடிய எந்தவிதமான இரசாயனப் பதார்த்தத்தையும் உலகில் யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
ஆகாரங்களில் இட்டோ, ஆடைகளில் தடவியோ மலட்டுத் தன்மையை உண்டுபண்ணுவதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரமானது இனவாத அடிப்படையைக் கொண்டதாகும்.
அவ்வாறான மலட்டுத் தன்மைகள் தொடர்பில் நிரூபிக்கப்பட்ட வைத்திய சான்றுகள் இதுவரை இல்லை.
பொதுமக்கள் இவ்வாறான பொய்ப்பிரச்சாரங்களுக்கு ஏமாற்றமடைவதிலுருந்து விலகியிருக்க வேண்டும்.
உணவுகளில் இட்டோ, பாணங்களில் (பாலில்) இட்டோ, ஜெல்களைத்தடவுவதன் ஊடாக இரசாயனப் பதார்த்தங்களை உடலுக்குள் உள்ளீடு செய்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்த முடியாது.
மலட்டுத் தன்மைக்கு காரணம் அவரவரது பிறப்புவாசியாகும். வெளியில் இருந்து உடலுக்குள் செல்லும் பதார்த்தங்கள் மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவதில்லை.
பிறப்புக் கட்டுப்பாடு, குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் மலட்டுத் தன்மைகளாக கருதப்படுவதில்லை.
தற்காலத்தில் பல்வேறான குடும்பக் கட்டுப்பாட்டு முறைமைகள் பாவனையில் உள்ளன.
தாங்களுக்குத் தேவையான விதத்தில் தமது குடும்பத்தைத் திட்டமிட இவை உதவுகிறது. அவற்றுக்கு அரசின் அனுமதிகூட வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டு முறைமைகள் உலகில் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்துவருகின்றன.
ஐக்கியநாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்புகள்,
யுனிசெப் அமைப்பு போன்றன இவற்றை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன.
உலகின் அனைத்து நாடுகளும் இவற்றை அங்கீகரித்துள்ளன.
நிலையான மற்றும் தற்காலிகம் என இரண்டு வகையான கருத்தடை முறைமைகள் உள்ளன.
அவை உரியவர்களது தேவைக்கு ஏற்பவே பயன்படுத்தப் படுகின்றன.
மலட்டுத்தன்மைக்கும், குடும்பக் கட்டுப்பாட்டு முறைக்கும் தொடர்பில்லை.
சனத்தொகைப் பரம்பல் தொடர்பில் இனவாத அடிப்படையில் நோக்கும சிலரே இதனை சமூகமயப்படுத்துகின்றனர்.
மலட்டுத்தன்மைக்கும், ஆகாரங்கள் மற்றும் ஆடைகளுக்கிடையில் தொடர்புகள் இல்லை.
இதுபோல் மலட்டுத்தனமையை உண்டுபண்ணும் மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவுமில்லை.
சிங்களத்தில்: துமிந்த சம்பத்