மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் மழைகொண்ட காலநிலை இன்று 28ம் திகதி வரை காணப்படும். 1ம் திகதிக்குப் பின்னர் படிப்படியாக்கக் குறைவடையும் என மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் பாசிக்குடாவில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் .மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச ரீதியாக பெய்த மழைவீழ்ச்சி பின்வருமாறு.

மட்டக்களப்பு நகரில் 32.9 மில்லிமீற்றரும்,நவகிரியில் 17 Mm,தும்பங்கேணி 21Mm,மைலம்பாவெளி 50.4Mm,பாசிக்குடாவில் 100.9Mm,உன்னிச்சை 19.5Mm,வாகனேரி34.2Mm,கட்டுமுறிவு 7.2Mm,றூகம்குளம் 45.0Mm,கிரான் 50.0Mm,கதிரவெளி 10.4Mm பெய்துள்ளதாக வளிமண்டலவியல் மாவட்ட திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

வளிமண்டலத்தில் அலைபோன்ற வானவெளி தெரிவதனாலேயே இவ்மழைவீழ்ச்சி தொடர்ச்சியாக பெய்துவருகின்றது.


இதனால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கொட்டும் மழையில் நனைந்து கடமைக்கு சென்றார்கள்.

தொடர்ச்சியான மழைகாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் திண்மக்கழிவகற்றல் சீரானானதாக இடம்பெற்றது.

.மக்களின் குடியிருப்புக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. விவசாயிகளின் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அம்பிளாந்துறை-தாந்தாமலை வீதியில் வெள்ளம் காணப்படுகின்றது.இதனால் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

டினேஸ்