ஹிப்னோசிஸ் ஒரு மாயாஜாலம் இல்லை; அது ஒரு உளவியல் மருத்துவம்! மனோதத்துவ மருத்துவ துறையின் சமீபக்காலத்திய மிக முக்கிய அறிவியல் கண்டுப்பிடிப்பு!
அதைப்பற்றி பல மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தலில், "ஹிப்னோசிஸ் என்பது மனிதனின் சராசரி உடலியல் செயல்களில் ஒன்றுதான். ஒவ்வொரு நாளும் மனிதனின் மூளையின் இயக்கம் விழிப்பு நிலைக்கும், தூக்க நிலைக்கும் மாறி மாறி வரும். இது தினந்தோறும் நடக்கும். இரு உடலியல் நிலைகளான விழிப்பு நிலை, ஆழ்ந்த தூக்க நிலை இவைகளுக்கு நடுவில் உள்ள ஒரு சிறு நிலையே ஹிப்னோசிஸ் என்ற அறிதுயில்" என்கிறார்கள்.
மூளையின் செயல் ஆற்றலை மதிப்பிட மருத்துவர்கள், EEG என்ற Electro Enchepalo Graphy (EEG) யைப் பயன் படுத்தி அதன் ஓட்டத்தை அளவிடுகிறார்கள். EEG என்பது ஒரு மின் மருத்துவக்கருவி. இது மனிதமூளையின் நரம்பு செல்களில் (Neurons) உருவாகக்கூடிய Electric potential (மின் அழுத்தம்)களின் மாற்றங்களை அளவிடக்கூடியது. இதைக் கொண்டு மூளையின் வேலைத்திறனையும், இயக்கங்களையும், தூக்கத்தின் நிலைகளையும் அளவிடலாம். பொதுவாக EEGல் பதியக்கூடிய Electro Potential Waveகளை நான்கு விதமாக பிரிக்கிறார்கள். அவை வருமாறு:
1.பிட்டா அலைகள் (Beta Waves)
2.அல்பா அலைகள் (Alpha Waves)
3.டிட்டா அலைகள் (Theta Waves)
4.டெல்டா அலைகள் (Delta Waves)
அன்றாட வாழ்க்கைகளில் மனித மூளையில் ஏற்படும் எண்ண அலைகளையே EEG என்ற கருவி அளவிடுகிறது. இந்த எண்ண அலைவரிசைகளை Wavelength என்பர். Wavelengthகளின் எண்ணிக்கைகளை வைத்துதான் மூளையின் அலைகளைப் பிரிக்கிறார்கள். அவைகளைப் பற்றி விரிவாக காண்போம்.
1) பிட்டா அலை நிலை (BETA BRAIN-WAVE STATE) (14-30 cps):
இது பொதுவாக 14 முதல் 30 வரை அலைகளைக்(Waves) கொண்டது. சாதாரணமான, விழித்த, முழுமையான உணர்வுள்ள(conscious activity of the brain) மூளையின் ஒரு சராசரி நிலையாகும். சராசரியாக தினமும் 16 மணி துளிகள் மனிதன் இந்த நிலையில் இருப்பான். பிட்டா அலை நிலையில் மனிதனின் மூளையின் திறன் முழுமையான உஷார்நிலையாகவும், உடல் செயல்பாடுகளில் முழு திறனும், உணர்ச்சிகளான கோபம், கவலை, துக்கம், பயம் போன்ற மனம் சார்ந்த செயல்களும், கட்டுக்கடங்காத உடல் இயக்கங்களான unconditional reflex போன்றவைகளும் இயல்பாகவே நடக்கும். இந்த நிலையில் ஹிப்னோஸிஸ் செய்யப்பட்டால், மூளை தன்னை இந்த பிட்டா அலை நிலையில் இருந்து அடுத்த அலை நிலையான அல்பா(Alpha) நிலைக்கு மாற்றும்.
2) அல்பா அலை நிலை (ALPHA BRAIN-WAVE STATE) (8-13 cps):
இது பொதுவாக 8 முதல் 13 வரை அலைகளைக்(Waves) கொண்டது. இந்த நிலை மனித உடல் ரிலாக்ஸ், அதாவது தளர்வு அடைவதில் இருந்து தொடங்குகிறது(The alpha state is state of beginning of relaxation). EEG வரைப்படத்தில் இந்த அல்பா அலைகள் உயர் அதிர்வெண் (high frequency) மற்றும் குறைந்த வீச்சு (low amplitude) கொண்டு இருக்கும். இந்த நிலையில் மூளை முழு ரிலக்ஸாகவும், அதே நேரத்தில் விழிப்பாகவும் இருக்கும். இந்த அல்பா அலை நிலையில் உடல் தளர்வு, மனம் தளர்வு, சுயமாக செயல் படமுடியாத விழிப்புணர்வு மற்றும் மன அமைதி போன்ற உளவியல் தன்மைகளும், உடலியல் தன்மைகளும் கொண்டிருக்கும். மன அமைதி, நல்ல உணர்வு, இன்பமான நிலை போன்ற உணர்ச்சி பூர்வமான உணர்வுகளும் இந்த அல்பா அலை நிலை ( State of Alpha Wave)ல் இருக்கும். ஹிப்னாஸிஸ் (Hypnosis), தியானம் (Meditation), பகல் கனவு (day dreaming), awakening, biofeedback போன்ற உள்ளம் சார்ந்த செயல்களும் இந்த அல்பா எண்ண அலையில் ஒத்திருக்கும்.
3) டிட்டா அலை நிலை (THETA BRAIN-WAVE STATE) ( 4-8 cps):
இது பொதுவாக 4 முதல் 8 வரை அலைகளைக் (Waves) கொண்டது. இது மன அமைதி, நிதானமான மற்றும் மிகவும் ஆழமான ரிலாக்ஸான மன நிலையாகும். சிறு தூக்கம், Rapid Eye Movement- REM Sleep போன்ற உடலியல் நிகழ்வுகளில் இந்த டிட்டா எண்ண அலை தான் இருக்கும். இந்த நிலைகளிலும் ஹிப்னோசிஸ் என்ற செயல்கள் நடைப்பெறச்செய்யலாம்.
4) டெல்டா மூளை அலை (DELTA BRAIN-WAVE STATE) (.05-4 ccps):
இது பொதுவாக .05 முதல் 4 வரை அலைகளை (Waves) கொண்டது. இது ஆளமான தூக்க நிலை(Deep Sleep)யாகும். இந்த நிலையில் மூளையில் எந்த விஷயத்தைப் பற்றிய உணர்வும் இருக்காது. Non Rapid Eye Movement (NREM) sleep-ம் இந்த நிலையைச் சார்ந்தது. இந்த நிலையில் Hypnosis செய்ய முடியாது.
மனிதன் காலையில் தூக்கத்தில் இருந்து எழும் சமயம் அவனின் Electo Enchepalo Graphy (EEG)யில் Brain wave அல்பா-Alpha நிலையில் இருந்து பிட்டா- Beta நிலையான விழிப்பு நிலைக்கு வரும். அதே சமயம் இரவில் உறங்க செல்லும் சமயம் Beta wave நிலையில் இருந்து Alpha நிலைக்குச் சென்று பிறகு Theta, Delta நிலையில் மாறிமாறி வரும். அதாவது REM SLEEP, NREM SLEEP மாறிமாறி வரும். இவ்வாறு தான் மனிதனின் மூளை இயங்குகிறது.
ஹிப்னாஸிஸ் (Hypnosis) என்பது மனதின் அல்லது உள்ளத்தின் உள்ள ஓர் இயற்கையான நிலையாகும். இது தூக்கநிலை போன்ற நிலையும் இல்லை. ஒருவன் ஹிப்னாஸிஸ் செய்யப்பட்டால், அவன் தாம் ஹிப்னாஸிஸ் செய்யப்பட்டிருக்கிறோம் என நன்றாக உணர முடியும். அதாவது அறிவோடு கூடிய தூக்கம் போன்ற நிலை தான் ஹிப்னாஸிஸ் (Hypnosis). ஹிப்னாஸிஸ் நிலையில் மூளையின் எண்ண அலை (Brain wave) அல்பா-Alpha wave நிலையில் இருக்கும். வெளி மனதிற்குரிய (Conscious mind) உணர்வுகளுடன், உள்மனம் (Subconscious mind) உணர்வுகளும் இருக்கும். அதாவது வெளிமனம் உள்மனம் இவை இரண்டு உணர்வுகளும் இருக்கும். மூளையின் உணர்வு நிலை அல்பா-Alpha நிலையை ஒத்து இருக்கும். அதாவது முழு விழிப்பு நிலை(Full Conscious awake), இவற்றுடன் மூன்று விசயங்கள் ஒத்திசைய அமையவேண்டும். அதாவது:
1. 100% விழிப்பு (அ) கவனம் நிலை
2. உடலிலுள்ள அனைத்து தசை (Muscles)கள் ரிலாக்ஸாக இருக்கவேண்டும்.(இந்த நிலையில் ஹிப்னோஸிஸ் செய்யப்படுபவர் தம் உடல் இலேசாகவும், மிதப்பது போல் சிறிது Warm ஆகவும் உணர்வார்)
3. உடனடியாக தம் உடலை
அசைக்க முடியாது ( Complete and sudden immobility)
இந்த நிலையை சரியாக கூறவேண்டும் என்றால் Laughing gas என்ற Nitrous Oxide-ஐப் பல் மருத்துவரோ அல்லது அறுவை சிகிச்சை மருத்துவரோ பயன்படுத்தினால் எப்படி இருக்குமோ அதே நிலைதான் ஹிப்னாஸிஸ்(Hypnosis) என்ற அறிதுயில். இந்த ஹிப்னாஸிஸ் நிலையைப் பற்றி இப்படியும் விவரிக்கலாம்:
அதாவது அதிகப்படியான கவனம் அல்லது விழிப்பு நிலை(Increased concentration)யில், எல்லா உடல் தசை(Muscle)கள் ரிலாக்ஸ்(Complete body relaxation)ஆக இருக்க, உடலை உடனடியாக இயக்க இயலாமை (lack of movement); ஆனால் தொடு உணர்வு, செவி உணர்வு, நுகர் உணர்வு நன்றாக இருப்பது.
மூளைக்குச் செல்லக்கூடிய உணர்வுகள் விழிப்புடனும், மூளையில் எந்த ஒரு எண்ணமும் இல்லாமலும், மூளையில் இருந்து வெளியே வரக்கூடிய எந்தக் கட்டளைகளையும் (Motor impulse) செயல்படுத்த இல்லாத நிலைதான் ஹிப்னாஸிஸ் என்ற அறிதுயில் ஆகும். மேலும் இதில் எவ்வகையான அன்னிச்சை செயல்களும் (Unconditional reflex) நடைப்பெறாது. இவைகளுடன் Autonomic Nervous System என்ற தன்னார்ந்த நரம்பு மண்டலமும் ஹிப்னாஸிஸ் நிலைக்குச் சில சமயம் கட்டுப்படுகிறது.
ஹிப்னோஸிஸ் (HYPNOSIS) ஓர் அறிமுகம்:
ஹிப்னோஸிஸ் (Hypnosis) என்பது ஓர் உளவியல் சார்ந்த மருத்துவ சிகிச்சை முறை! இதன் முலம் உள்ளம் சார்ந்த பிரச்சனைகள் (psychological), உணர்ச்சிகள்(emotional), மற்றும் சில உடல் ரீதியான பிரச்சினைகளைக் (physical problems) குணப்படுத்தலாம்.
இது மனதைக் கட்டுப்படுத்தக்கூடியதும் (mind-control) இல்லை; மூளை சலவை (brain-washing) செய்யக்கூடியதும் இல்லை. தூக்கம்(Sleep), அல்லது விசித்திரமான மாற்றங்கள், மாயங்கள், கண்கட்டி வித்தைகள் போன்ற எந்த நிகழ்வுகளும் இதில் கிடையாது.
பொதுவாக திரைப்படங்கள், நாவல்கள், கதைகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றில் ஹிப்னோஸிஸைப் பற்றி தவறாகவும் மிகவும் அதிகப்படுத்தியும் சித்திரப்படுத்தியுள்ளனர். இன்றைய அறிவியல் ஆய்வுக்குப் பின் மனோதத்துவ நிபுணர்கள் ஹிப்னோஸிஸ் பற்றிய அதிகப்படியான மாயாஜால செய்திகளை மறுப்பது மட்டுமின்றி, அவை அதிகப்படியான இட்டுக்கட்டப்பட்ட விஷயங்கள் எனவும் உறுதிபடுத்தியுள்ளனர்.
மேலே கூறப்பட்டது போலவே இது மனோவசியம் கிடையாது; மாயாஜாலங்களும் இல்லை. பொதுவாக யாருடைய இரகசியங்களையும் அவர்களின் அனுமதி இன்றி பெறமுடியாது. பல உளவுதுறைகள், பல அரசாங்க காவல் துறைகள், ராணுவத்தினர்கள் இந்த ஹிப்னாடிஸ் முறையைப் பயன்படுத்தி குற்றவாளிகளிடமிருந்து உண்மைகளைப் பெற முனைந்ததில் தோல்வியே அடைந்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் அதிகம். இது இயற்கைக்கு மாற்றமான முறை கிடையாது. இதில் ஜின்கள், பேய்களின் வேலையும் இல்லை.
ஹிப்னோஸிஸ் (Hypnosis), ஒரு இயற்கை மற்றும் பாதிப்பை தராத மனதின் நிலை தான். இதை ஹிப்னோஸிஸ் செய்யப்பட்டவரே உணருவார். அதே சமயத்தில் அவர் விரும்புகிற போது ஹிப்னோஸிஸ் (Hypnosis) நிலையில் இருந்து வெளியே வரவும் முடியும்.
நாம் அன்றாட வாழ்வில் நம்மை அறியாமலேயே ஹிப்னோஸிஸ் நிலைகளுக்குச் சென்று வருகிறோம். உதாரணமாக…
• பகல் கனவு
• வாகனங்களை அதிக நேரம் ஓட்டுதல்
• மிகவும் பிடித்த புத்தகங்களுடனோ அல்லது நாவலிலோ மனம் ஒன்றுதல்
• கம்பியூட்டர் கேம் விளையாடுதல்
• டீவி/சினிமா பார்த்தல்
• இணையம்/ஃபேஸ்புக்
• விளையாடும் நேரம்
• பிடித்த இசை/பாடல் கேட்கும் பொழுது...
ஹிப்னோஸிஸ் கற்போம்-பகுதி2!மேற்கண்ட நிலைகளிலெல்லாம் நாம் நம்மை அறியாமலே ஹிப்னோஸிஸ் நிலைக்குச் சென்று வருகிறோம்.
ஹிப்னோஸிஸ் நிலை (State of Hypnosis) என்பது என்ன?:
ஹிப்னோஸிஸ் நிலை பற்றி நல்ல விளக்கம் (Definition) என்னவென்றால் நம் மனதின் கவனத்தை, அல்லது சிந்தனையை ஒருமுகப்படுத்தி(highly focused attention), பின்னர் நம் மனதிற்குத் தேவையான உச்சபட்சமான ஆலோசனை அல்லது கருத்துரை வழங்குவதாகும். ஹிப்னோஸிஸ் நிகழ்வுகளில் உடல் தளர்வு (Body relaxation), தசை ரிலாக்ஸ் இவைகளும் சேர்ந்து இருக்கும்.
ஒரு நபர் ஹிப்னோஸிஸ் செய்யக்கூடிய மருத்துவர் வழியே ஹிப்னோஸிஸ் (Hypnosis) செய்யப்படுகிறார் என்றால் அது ஹெட்டிரோ-ஹிப்னோஸிஸ் (hetero hypnosis) எனப்படும். இதை ஹிப்னோதெரபி (hypnotherapy) என்றும் கூறுவர். சுயமாக தனக்கு தானே தூண்டி அதன்மூலம் ஒருவர் ஹிப்னோஸிஸ் நிலைக்கு (State of Hypnosis) வந்தால், அதற்கு ஆட்டோ-ஹிப்னோஸிஸ் (autohypnosis) என்று பெயர். இதை தான் பெரும்பாலோர் சுய ஹிப்னோஸிஸ் (self-hypnosis) என குறிப்பிடுகின்றனர்.
“Hypnosis” என்ற வார்த்தை, கிரேக்க மொழியின் ’Hypos’ (அர்த்தம் Sleep-தூக்கம்) என்ற சொல்லில் இருந்து வந்தது. இது Neuro- hypnotism (sleep of nervous system -நரம்பு மண்டலத்தின் தூக்கம்) என்ற வார்த்தையின் குறுயீடு சொல்லாக அழைக்கப் படுகிறது. முதல் முதலில் ஜேம்ஸ் ப்ரைட் (James Braid) (1796 -1860) என்ற நரம்பியல் மருத்துவர் ஹிப்னோஸிஸ் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
எனிலும் ஹிப்னோஸிஸ் என்பது இயற்கை தூக்கம் இல்லை. ஆனால் தூக்கம் போன்ற ஒரு நிலை தான்! அந்த நிலையில் ஹிப்னோஸிஸ் செய்யப்பட்டவரால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது விளங்கமுடியும். ஹிப்னாஸிஸை மன ஆற்றல் கொண்டு தூண்டப்படும் அறிதுயில் நிலை என்றும் கருத்து கொள்ளலாம்..
1950ஆம் ஆண்டு வரை உலகில் எந்த மருத்துவ அமைப்பும் ஹிப்னோஸிஸ் முறையை மருத்துவமாக அங்கீகரிக்கவில்லை. அதே ஆண்டு American Medical Association(AMA), American Psychological Association(APA), British Medical Association(BMA) போன்ற மருத்துவ துறைச்சார்ந்த அமைப்புகள் இவைகளை ஒரு மருத்துவ சிகிச்சை முறைகளாக அனுமதித்தது. இன்று மருத்துவ உலகில் இது மிகப்பெரியதொரு சிகிச்சை முறையாக பரவலாக இருந்து வருகிறது..
ஹிப்னோஸிஸ் முறையான பயன்கள்(Legitimate Uses of Hypnosis):
American Society of clinical hypnosis (ASCH), ஹிப்னோஸிஸின் மூலம் சரி செய்ய கூடிய நோய்களின் லிஸ்டை American Psychological Associationன் அனுமதியுடன் வெளியிட்டார்கள். அவை வருமாறு:
• அலர்ஜிகள்(Allergies)
• கவலை(Depression)
• புகை, மது பழங்கங்களால் தூக்கமின்மை(Smoking, alcohol cessation)
• குடல் நோய்(Bowel’s syndrome, colitis)
• crohn’s disease
• அதிக இரத்த அழுத்தம்(High B.P)
• Reynaud’s disease
• பாலியல் பிரச்சனை(Sexual dysfunction)
• கட்டுக்கடங்காத உணர்ச்சிகள்(Emotions like angry, fear..etc)
• தோல் நோய்கள்(Dermatological disorder like eczema, herpes, dermatitis, pruritus, psoriasis)
• வலி நிவாரணம் (Pain management like back pain, cancer pain, dental anesthesia, Headache, migraine, arthritis and rheumatism.
இவைகள் போன்ற பல வகையான மனரீதியான, உடல் ரீதியான நோய்களுக்கு ஹிப்னோஸிஸ் ஒரு நல்ல மாற்று மருத்துவ முறை. இதை இன்னும் விரிவாக ஒன்லைன் வகுப்பில் பார்ப்போம்.

