இறக்காமம் பிரதேச சபையில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் இன்று (25/01/2018) இறக்காம ஆலையடிச் சந்தியில் இடம்பெற்றது. 

இம் மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் ஹரீஸ், பிரதி அமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர், நாளைய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், உச்சபீட உறுப்பினர்கள், இறக்காமம் பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களும், மத்திய குழு உறுப்பினர்களும், கட்சி பிரமுகர்களும், கட்சிப் போராலிகளும் மற்றும் பொது மக்கள் பெருந்திரலானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.