இலங்கையில் ஷீஆக்களுடைய வளர்ச்சிக்கு நளீமிக்கள் ஆற்றிய பங்கு அளப்பெரியது. இலங்கையின் ஷீஆ மதகுருவாகிய அப்துல் ஹலீம் (கும்மி) என்பவர் எழுதிய பாலியலும் பருவ வயதும் என்னும் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியவர் AC. அகார் முஹம்மத் (நளீமி) ஆவார்.
அதேபோன்று SH. மௌலானா என்ற ஷீயா பேர்வழி எழுதிய இஸ்லாமிய உலகும் சவால்களும் என்ற நூலுக்கு அணிந்துரை எழுதியவர் மீள்பார்வை பத்திரிகையின் ஆசிரியர் றஊப் ஸெய்ன் (நளீமி).
மேலும் கல்குடா இத்ரீஸ் (நளீமி) எழுதிய "ஹலால் நடைமுறையும் சவால்களும்" என்ற புத்தகத்தை இலங்கை ஷீஆக்களே தன்னார்வத்தோடு முன்வந்து அதை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்ரீஸ் நளீமி அப்புத்தகத்தில் ஷீஆக்களுடைய கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் இலங்கையில் உள்ள வஹாபிஸ தஃவா அமைப்புக்களை விமர்சித்ததே இதற்கு பிரதானமான காரணமாகும்.
எனவே இலங்கையில் இயங்கி வருகின்ற ஷீஆக்களுக்கும் நளீமிக்களுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் இருப்பதும் ஷீஆக்களுடைய மக்கள் தொடர்புத் தரகர்களாக இந்த நளீமிக்களே செயற்பட்டு வருவதும் வெளிப்படையான உண்மையாகும்.

