கடந்த வருடம் இறக்காமம் வாங்காமம் பள்ளிவாசலினால் வழங்கப்பட்ட கந்தூரி உணவு நஞ்சானதில் 3 பேர் மரணமானதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டு அம்பாரை மாவட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர்.
 
உணவு நஞ்சாதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்ரைச் சேர்ந்த இரு நபர்கள் தமண பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக அம்பாறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சட்டத்தரணிகளின் தொடச்சியான வாதத்திறமையால் அந்த இரு சந்தேக நபர்களையும் இன்று குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்மானித்து வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்துள்ளது.