முஸ்லிம் பாடசாலைகளின் ஒழுக்கம் வீழ்ச்சியடைந்து வரும் கவலை(?) மேலோங்கியதால்! பாடசாலை நிர்வாகங்கள் ஒழுக்கக் கோவை தயாரிப்புகளில் களமிறங்கியுள்ளன.
கோவையின் பிரதான விதியாக "முகம் சவரம் செய்யப் பட்டிருத்தல்" என்பது பல ஊர் பாடசாலைகளது ஒழுக்கக் கோவையில் இடம் பிடித்துள்ளது.
ஏட்டுப் படிப்புடன் தம் அறிவை முடக்கிக் கொண்ட சில கல்விமான்கள்(?) முகச்சவரம் என்பதானது அரசாங்கச் சட்டம் என அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
யூதனுக்கு மாற்றம் செய்து தாடியை வழர விடச் சொன்ன உத்தம நபியின் உயரிய பண்பாட்டை ஒழுக்கமற்ற செயலாக விதிவரைந்து கலாச்சார மாற்றம் கொண்டுவர முயலும் அறிவீனர்கள் யூதர்களது சதி வலையில் சிக்குண்டுள்ளார்களா? யூதர்களது கைகூலிகளாக செயல் படுகிறார்களா என்ற ஐயம் நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றது.
சில தசாப்தங்களாக நாட்டில் உருவாகியுள்ள இஸ்லாமிய இயக்க வேறுபாடுகள் பல கசப்பான நிகழ்வுகளை உருவாக்கியிருந்தாலும்! ஆங்காங்கே இஸ்லாத்தை கடைப்பிடித்து வாழும் நல்ல இளைஞர்களையும் உருவாக்கியுள்ளமையை எவராலும் மறுக்க முடியாது.
இந்நிலையில் பர்தாவுடன் கூடிய யுவதிகள் உருவாகியுள்ளது போல்! தாடியுடன் கூடிய இளைஞர்களும் உருவாகி வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்லாமிய கலாச்சாரத்துக்குள் பழக்கப் படுத்தி எதிர்கால இளசுகளை பசளையிட்டு வழர்க்க வேண்டிய எம் பாடசாளைகளே! இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு எதிரான யூத கலாச்சாரத்தை ஒழுக்கக் கோவைகளாக மாற்றி வருகின்றமை நாமே நம் தலையில் மண்ணை வாரிக் கொட்டிக் கொள்கின்றமைக்கு நிகரான செயலாகும்.
நாட்டின் அண்மைக்கால வரலாற்றை திரும்பிப் பார்க்கையில்! எதிர்காலத்தில் எம் சமூகத்தின் உரிமைகள் பரிபோய்விடுமா என்ற பாரிய ஐயம் மேலோங்கியுள்ள நிலையில்! எமக்குள்ள உரிமைகளை நாமே பிடுங்கி வீச முயல்வதானது சுத்த முட்டால்தனமாகும்.
இன்று தாடி அழங்கோலமாக தெரியும் நம்மவர் கண்களுக்கு பர்தா அழங்கோலமாக தெரியவில்லை. எனினும் அந்நியர்களது கண்களுக்கு என்றும் பர்தா அவசியமற்றதாகவே தென்படுகிறதானது யாவரும் அறிந்த உண்மை. இன்று தாடிக்கு எதிராக நம்மவர்கள் போடும் ஒழுக்க(?) கோவையை! நாளை அவர்கள் பர்தாவுக்குமானதாக மாற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தவாதமுள்ளது?
எதிர்கால சமூகத்தின் அடித்தளத்தை கட்டி எழுப்ப வேண்டிய பாடசாளைகளே! எதிர்காலத்தை சங்கடத்தினுள் தள்ளுவது சமூகத் துரோகமாகும்.
இச்சமூகத்தின் ஈமானையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காகவே நம் முன்னோர்கள் முஸ்லிம்களுக்கென்று "முஸ்லிம் பாடசாளைகளை" உருவாக்கி வைத்தார்கள். அதே பாடசாளையில் அமர்ந்து இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு எதிரான விதிகளை உருவாக்கும் இக்கால நடவடிக்கை மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும்.
அதிபர்கள் உற்பட ஆசிரியர்களது ஒழுக்கத்துக்கே தனி ஒழுக்கக் கோவை அமைக்க வேண்டியளவு வண்டவாளங்கள் பல ஊர்களில் நாரிக் கிடக்கின்றன.
  • வாய் திறந்தால் பண்பாக பேசத் தெரியவில்லை,
  • மாணவர்களுக்கு முன்னால் ஆடை ஒழுங்கை பேனத் தெரியவில்லை,
  • மாணவர்களுக்கு முன்னால் ஒழுக்கமாக சாப்பிடத் தெரியவில்லை,
  • நேரத்துக்கு பாடசாளைக்கு சமூகம்தரத் தெரியவில்லை,
  • அமானித உணர்வுடன் கற்பிக்கத் தெரியவில்லை,
இந்நிலையில் தம்மைத் திருத்தி முன்மாதிரியாக வாழ்கை பாடத்தை பயிற்சியாக கொடுக்கத் தெரியாத ஏட்டறிவாளர்கள் இணைந்து மார்க்கத்துக்கும், சமூகத்தும், வரலாற்றுக்கும் இளைக்க முற்படும் இப்பாரிய துரோகத்தை விட்டும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வியத்தில் உலமா சபை உற்பட அமைப்புக்கள், பள்ளி நிர்வாகங்கள், சமூக ஆர்வளர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
இதை சாதாரண விடயமாக கண்டுகொள்ளாது விடின்! எதிர்கால எம் சமூகத்தின் கல்வியும், உரிமையும் எதிர்மறையான கசப்பான பல விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
"அல்லாஹ் பாது காப்பானாக"
அபூ ஸுமையா