உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் காத்தான்குடி நகர சபைக்கு தராசு சின்னத்தில் போட்டியிடும் எனது தலைமையிலான முஸ்லிம் தேசிய கூட்டமைப்புக்கு தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களித்த அனைத்து அரச ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அந்த வகையில் 22ஆம் திகதி நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொண்ட தேர்தல்கள் செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பவற்றில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கும் 25, 26ஆம் திகதிகளில் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொண்ட ஏனைய அரச அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் மீண்டும் ஓருமுறை எமது முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் அனைத்து வட்டார வேட்பாளர்கள் சார்பாகவும் தான் முதன்மை வேட்பாளர் என்ற வகையில் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

உண்மையான மாற்றத்தை நோக்கி
ஊழல் அற்ற நேர்மையான தலைமைத்துவத்திடம் நகர ஆட்சியை கையளிப்போம்.

இவ்வண்ணம்
ஷிப்லி பாறுக் (பொறியியலாளர்)
முதன்மை வேட்பாளர்
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு
(முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)