பிரபல எழுத்தாளர் வெலிவிட ஜரீனா முஸ்தபாவின் கணவர், முஸ்தபா ஹாஜியார் இன்று (14)   காலமானார். 

பிரபல வர்த்தகரான ஆரியாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 4 பிள்ளைகளின் தந்தையாவார்.

இவரது ஜனாஸா இன்று (14) அஸர் தொழுகையின் பின்னர் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எழுத்தாளர்கள், கலை இலக்கியவாதிகள், வர்த்தகர்கள் எனப் பலரும் ஜனாஸாவில் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)