வவுனிவில் விபத்துக்குள்ளான வரை ஒரு கும்பல் தாக்கியதில் இளைஞன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா நகரப்பகுதியில் இருந்து வைரவபுளிய்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞனை அங்கு நின்ற இளைஞர் கும்பல் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் 23 வயதுடைய அ.அமிர்தன் என்ற இளைஞன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம்தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.
வவுனியா நிருபர்

