நீண்ட காலமாக கட்சியின் வளர்ச்சிக்காகவும்,கட்சியை முன் கொண்டு செல்லவும்,கடுமையாக பாடுபட்டு உழைத்தவர்களை புறந்தள்ளிவிட்டு எந்தவித தகுதியும் இல்லாத,கட்சி முன்னேற்றத்திற்கு கடுகளவும் உழைக்காத, பாடுபடாத,எந்தவித அடிப்படை தகுதியும் இல்லாத தனிப்பட்ட சில நபர்களையே இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட ஐ.தே. கட்சி முன் வந்ததையிட்டு இப்பிரதேச ஐ.தே. கட்சி அங்கத்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள ஐ.தே. கட்சியின் அநுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதியின் தேசிய இளைஞர் கூட்டமைப்பின் முன்னால் தலைவரான டாக்டர் நிரஞ்சன் விஜேசூரிய தெரிவித்துள்ளதாவது

அநுராதபுர மாவட்டத்தில் கடந்த 20 வருட காலமாக ஐ.தே. கட்சிக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாத ஒரு காலப் பகுதியில் கட்சியை காப்பாற்ற,கட்சியை முன்னேற்ற கடுமையாக பாடுபட்ட நபர்களில் சிலர் இம்முறை புறந்தள்ளப்பட்டுள்ளனர்.இம்முறை தேர்தலில் போட்டியிட இவர்களுக்கான வாய்ப்பை கட்சி வழங்க தவறிவிட்டது.இதனால் கட்சி மீது குறிப்பிட்ட இவர்கள் வெறுப்படைந்துள்ளனர்.என்றார்.


அநுராதபுரம் நிருபர் -  ஏ.ஆர்.எம்.ரபியூதீன்