ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று 26 வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜி.எல்.பீரிஸ் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள்,அரசியல் பிரமுகர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்களத்திலும்,தமிழிலும் காத்தான்குடி மக்கள் மத்தியில் உரையாற்றியதோடு மேடையில் இருந்து இறங்கி மக்களோடும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)