அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் அன்பளிப்பினால் பொத்துவில் நூறுல் ஹுதா அரபுக் கல்லூரி, மத்ரஸதுல் ஸபீலுர் ரஸாதி ஆகிய இரு அரபுக் கல்லூரிகளுக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான அரபுக்கல்லூரி வாசிகசாலைக்கான புத்தகங்கள் இன்று 27.01.2017 வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவருமான SSP மஜீட் அவர்கள் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஜெமீல் அவர்கள், அஸாம் ஹாபிழ் அவர்களும் கலந்து சிறப்பித்து அவர்களின் கரத்தினால் புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டு . தேசியத் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களுக்காக அரபுக் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களினால் துஆப் பிராத்தனையும் செய்யப்பட்டது.