கட்டார் மன்னர் ஷெயிக் தமீன் பின் ஹமாட் ஹல்தானி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு தனது குடும்பத்தினருடன் இன்றைய தினம் இலங்கை வந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கட்டார் மன்னனின் உத்தியோகப்பூர்வ அழைப்பை ஏற்று கட்டாருக்கு விஜயம் செய்த இலங்கையின் முதல் அரச தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பது குறிப்பிடத்தக்கது.