சிரியாவின் கிழக்கு கோடா மாகாணத்திலுள்ள கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து குளோரின் விச வாயு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச இராணுவத்தினர் இந்த விஷ வாயுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சிரியா எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
விஷ வாயு நிரப்பப்பட்ட ஏவுகணைகள் பல இவ்வாறு தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.

