இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரும் சுதந்திரத்திற்கு பின்னரும் இலங்கை முஸ்லீங்கள் இந்த நான்டின் பொருளாதார வளர்சிக்கும் 30 வருட கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் செய்த தியாகம் அளப்பெரியது
சிங்ளவர்கள் தழிழர்களாலும் தழிழர்கள் சிங்களவர்களாலும் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள் ஆனால் இலங்கை முஸ்லீங்கள் இந்த இரண்டு பிரிவினராலும் மாறி மாறி வஞ்சிக்கப்பட்டது மட்டுமல்லாது உயிர்சேதம் பொருள் சேதம் என இழந்த இழப்புக்கள் மட்டில்லாதது இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது குறிப்பாக இலங்கையின் சுதந்திரபோராட்டத்திற்கு முஸ்லீம்களின் பங்களிப்பு அளப்பெரியது அதேபோல் 30 வாருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆற்றிய பங்கும் அளப்பெரியதாகும் இந்த யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான எம் சகோதரர்கள் அனியாயமாக கொல்லப்பட்டது மட்டுமல்லாமல் இன்னும் பல்லாயிக்கணக்கான படைவீரர்கள் அங்கவீனர்களாக நடைபிணமாக இன்றும் இந்தநாட்டில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள் அதுமட்டுமல்ல இன்றுவரை பல்லாயிரக்கணக்கான எம் சகோதரர்கள் இந்தநாட்டில் உள்ள எல்லா பாதுகாப்பு படைப்பிரிவிலும் தங்கள் சேவைகளையும் தியாகங்களையும் இன்றுவரை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்
இவ்வாறு இந்த நாட்டுக்காக இரத்தம் சிந்தி உயிர்தியாகம் செய்து உடல் அங்கங்களை இழந்து இன்றுவரை இந்த நாட்டையும் இந்த நாட்டிலுள்ள சகோதர இன மக்களையும் மதித்து சகோதர மனபான்மையுடன் வாழ்ந்துவரும் நம்மை பேரினவாதிகளும் முஸ்லீங்களு எதிரான சர்வதேச சதிகாரர்களும் இணைந்து எமக்கு பல சோதனைகளையும் வேதனைகளையும் தந்தது மட்டுமல்லாது எமக்கு isis என்று முத்திரையும் குத்தி எம்மை அழிப்பதற்கும் விரட்டுவற்கும் அரச பயங்கரவாதத்தோடு முயற்சிக்கின்றபொழுது நம் முஸ்லீம் அரசியல் தலைவர்களும் பாராளமன்ற உறுப்பினர்களும் அரச சலுகைகளை பெற்றுக்கொண்டு பாராளமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும்
பேசாமடந்தைகளாக மௌனித்துப்போய் இருக்கின்றனர் ஆனால் தேர்தல்காலத்தில் மட்டும் எமக்குள் இனவாத கருத்தை தூவி எம் இரத்தத்தை சூடேற்றி வீரவசனம் பேசி நல்லவர்களாக நடித்து எம் வாக்குகளை கொள்ளையடித்து கொந்தறத்துகாறர்களுக்கு கொடுத்துவிட்டு தங்களுக்கு வேண்டிய அமைச்சுபதவிகளையும் உறவினர்களுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவிகளையும் பெற்றுக்கொடுத்துவிட்டு பில்லியன் கணக்கான கொந்தறுத்துக்களையும் பெற்று அவர்களை சுத்தியுள்ளவருக்களுக்கும் அதை பங்கிட்டு கொடுத்துவிட்டு சொகுசான வாழ்கையை வாழ்ந்துவருகின்றனர்
எம் கண்ணீரிலும் வியர்வையிலும் நாம் சிந்திய இரத்தத்திலும் அரசியல் வியாபாரம் செய்யும் இவர்களுக்கு என்ன தெரியும் இனவாதிகள் எம்மை விமர்சிக்கும் பொழுது அவர்களுக்கு முஸ்லீங்கள் இந்த நாட்டுக்காக செய்த தியாகம் யுத்தத்தில் ஏற்பட்ட உயிர்சேதம் என்ற எந்த புள்ளிவிபரமும் தெரியாமல் அறிவுபூர்வமாக அவர்களை எதிர்கொள்ளத்தெரியாமல் தடுமாறும் இவர்களும் இவர்களின் இயலாமையும் இன்றய காலகட்டத்தில் இடம்பெறும் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும் பாராளமன்றத்தில் இருப்பவர்களில் பாதிப்பேர் உயர்த்தில் சித்திபெறாதவர்கள் இப்படியானவர்களினால்தான் சில நேரம் பாராளமன்றம் கூட மீன்சந்தைபோல் மாறிவிடுகின்றது இது யார் தவறு வாக்காளர்களாகிய எமது தவறாகும் தேர்தல் காலங்களில் படித்தவர்களையும் பண்பானவர்களையும் தெரிவுசெய்யாமல் கள்வர்களையும் காட்டிக்கொடுப்பவர்களையும் துரோகிகளையும் ஏமாற்றி பிழைப்பவர்களையும் அவர்களிடம் இருந்து கிடைக்கும் அற்ப சலுகைகளை பெற்றுக்கொண்டு தெரிவுசெய்கின்றோம் பின்னர் அவர்கள் எமக்காக குரல் கொடுக்கவில்லை என்று விமர்சிக்கின்றோம் இதுதான் காலாகாலமாக நாம் செய்துவரும் மகாதவறாகும் நாம் விதைப்பதையே அறுவடையும் செய்யவேண்டும் என்பதே யதார்தமாகும் புல்லை விதைத்த நாம் நெல்லை அறுவடை செய்ய ஆசைப்படுவது முட்டாள்தனமாகும்
இந்தநாட்டில் அண்மைக் காலமாக முஸ்லீங்களுக்கு எதிராக இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல அல்லாஹ்வின் மாளிகைகள் உடைக்கப்படும் போது ஒரே அணியில் ஒன்றுசேர்ந்து ஒரு கூட்டணியாக செயற்பட முடியாதவர்கள் யாருக்காக அரசியல் செய்கின்றார்கள் இவர்களால் அரசியல்ரீதியாக நாம் பெற்ற விமோசனம்தான் என்ன ஒன்றுமே இல்லை இவர்களுக்கு ஆளுக்கொரு கட்சியும் தலைவர் என்ற பதவியும் முழு அமைச்சு ஒன்றும் இருந்தால் போதும் அவர்களை பொறுத்தவரை இங்குள்ள பிரச்னை யாருக்கு தேசியப்பட்டியல் கொடுப்பது யாருக்கு அமைச்சு கொடுப்பது யாருக்கு தவிசாளர் கொடுப்பது அடுத்த தேர்தலுக்கு யாருக்கு சீட் கொடுக்கிறது தேர்தலில் எந்தக்கட்சியோடு கூட்டுச்சேர்வது என்பதுதான் இவர்களின் பிரச்சினையாகும் இதுபுரியாமல் நாம் நமக்குள் அடித்துக்கொன்டு அண்ணன் தம்பி மாமா மச்சான் நண்பன் என்ற உறவுகளையும் இழந்து யாரையோ வாழவைக்க நாம் நமக்குள் அடித்துக்கொன்டு பிரிந்துவாழ்கின்றோம் நாளை நீங்கள் இறந்தால் கூட நீங்கள் ஒதுக்கிவைத்த மேற்குறிப்பிட்டவர்களே உங்களுக்காக கண்ணீர் சிந்தி உங்கள் உடல்களை சுமந்துசென்று அடக்கம் செய்வார்கள் மாறாக எந்த அரசியல்வாதியும் உங்களுக்கு ஒருதுளி கண்ணீரும் சிந்தமாட்டான் நீங்கள் இறந்த செய்தி கேட்டாலும் ஒரு sorry சொல்லி தான் முக்கியமான வேலையில் இருப்பதால் வரமுடியாமைக்கு வருந்துவதாக கூறி call ஐ கட்பண்ணிவிடுவான் இது கற்பனையல்ல நாம் கண்முன்னே கண்ட கடந்தகால கசப்பான அனுபவங்களாகும் இவைகளை நாம் எப்போது தவறு என்று புரிந்துகொள்வது நமக்கான மாற்றத்தை நாமே உருவாக்க முயற்சி செய்யாது அரசியல்வாதிகளை மட்டும் குறைகூறிக்கூறி இன்னும் எவ்வளவுகாலம் எம்மால் ஏமாளிகளாகவும் கோமாளிகளாகவும் வாழமுடியும் இஸ்லாம் நமக்கு சொல்லித்தந்த ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடிக்காதவரை நாம் நமக்கான எந்த அரசியல் விமோசனத்தையும் கண்டுகொள்ளமாட்டோம் என்பது உண்மை மட்டுமல்ல கடந்தகாலம் நமக்கு கற்றுத்தந்த மறக்கமுடியாத பாடமாகும்
இன்றய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மிடியாக்களின் தோற்றமும் அவைகளின் ஆதிக்கமுமே சமூக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் கனிசமான பங்குவகிக்கின்றன அதிலும் குறிப்பாக சமூகவலைத்தளங்கள் முதன்மை பெறுகின்றன இவைகளை கையாளும் பயனாளர்களின் பக்கச்சார்பான பதிவுகளும் உண்மையை சொல்பவர்களுக்கு சேறுபூசுதல் பொய்யான கணக்குகளை வைத்துக்கொண்டு அனியாக்காரர்களுக்கும் சுயநலவாதிகளுக்கும் சார்பாக போராடி மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துதல் போன்ற காரணங்களும் நம் சமூக சீர்கேட்டுக்கு முக்கிய காரணமாகும்
கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து நமக்குள் இருக்கும் குரோத மனப்பான்மையை களைந்து சகோதர மனப்பான்மையுடன் நாம் நமக்குள் ஒன்று சேர்ந்து நன்கு படித்தவர்களையும் பண்பானவர்களையும் நல்ல ஆழுமையுடன் கூடிய மொழித்திறன் பேச்சாற்றல் போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவர்களை இனங்கண்டு அவர்களுக்கான அரசியல் அங்கிகாரத்தை பிரதேசசபை முதல் பாராளமன்றம் வரை வழங்கவேண்டும் அவ்வாறு இல்லாமல் போனால் எமக்கெதிரான பேரினவாதிகளின் போராட்டத்தில் எம் சமூகம் அறிவுரீதியான எந்த வெற்றியையும் பெற முடியாது என்பது நிகழ்கால நிதர்சனமாகும்
எனவே ஒவ்வொருவரும் இதயசுத்தியோடு சிந்தித்து நமக்கான மாற்றத்தை நாமே ஏற்படுத்துவோம்
எந்த ஒரு சமூகமும் தங்களை மாற்றிக்கொள்ளாதவரை இறைவன் எந்த மாற்றத்தையும் அவர்களுக்காக ஏற்படுத்தமாட்டான்
நன்றி

