ஆன்மீகம் : 
கேள்வி ?:  
சிலர் அதிக அன்பு காரணமாக கணவனை வாடா போட எனவும் பெயர் கூறியும் அழைக்கிறார்கள் மேலும் கணவன் மனைவியை வாடி போடி என அழைக்கிறார்கள் இதற்க்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

பதில்:
கணவன் மனைவி இருவருக்கு மத்தியில் உள்ள தொடர்பு வெறும் உடல் ரீதியானது மட்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அதற்கு மேலாக உள்ளத்தோடு தொடர்பு கொண்டவையாகும்._

*19190  عَنْ جَدِّي قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ نِسَاؤُنَا مَا نَأْتِي مِنْهُنَّ وَمَا نَذَرُ قَالَ حَرْثُكَ ائْتِ حَرْثَكَ أَنَّى شِئْتَ فِي أَنْ لَا تَضْرِبَ الْوَجْهَ وَلَا تُقَبِّحْ وَأَطْعِمْ إِذَا أُطْعِمْتَ وَاكْسُ إِذَا اكْتَسَيْتَ وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ كَيْفَ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ إِلَّا بِمَا حَلَّ عَلَيْهِنَّ  رواه احمد*

ஹய்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன?
தவிர்க்க வேண்டியவை என்ன?
என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் (உமது மனைவி)
உமது விளைநிலமாகும்.  உமது விளைநிலங்களுக்கு
நீ விரும்பியவாறு சென்று கொள். (அவளைக் கண்டிக்கும் போது)
முகத்தில் அடிக்காதே அவளை அசிங்கமாகத் திட்டாதே!

நீ உண்ணும் போது  அவளையும் உண்ணச் செய்!

நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு!

வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே.

நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள்.(நூல் : அஹ்மத் (19190)

*_هُوَ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا ۖ فَلَمَّا تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِ ۖ فَلَمَّا أَثْقَلَت دَّعَوَا اللَّهَ رَبَّهُمَا لَئِنْ آتَيْتَنَا صَالِحًا لَّنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ189_*

"அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான்.  அவரிலிருந்து அவரது துணைவியை  அவளிடம் அவர் மனஅமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்தபோது (அங்கத்தில்) குறைகளற்றவனை
நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி_* செலுத்துவோராவோம்'என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.

திருக்குர்ஆன்  7:189

''நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்காக உங்கள் மனைவியை உங்களிலிருந்தே படைத்தான்...'' (அல்-குர்ஆன் 30 : 21)

கணவன் மனைவிக்குள் ஆறுதல் கிடைக்கும் எல்லா விஷயங்களையும் இந்த வசனம் அனுமதிக்கிறது.

சொற்கள், செயல்கள், விளையாட்டு இவை கணவன் மனைவிக்குள் ஆறுதலையும் நெருக்கத்தையும் கொடுக்கும். மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஒரு மனைவி தன் கணவனை பெயர் சொல்லியும் அழைக்கலாம். ''... வாடா .... போடா....'' என்றும் செல்லமாகவும் கூறலாம். இஸ்லாம் இதையும் தடுக்கவில்லை._

''மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமைப்போன்று மனைவிக்கும் உரிமை இருக்கிறது'' என்று கூறுகிறது இஸ்லாம். (அல் குர்ஆன்: 2: 228)

பெயர் சொல்லி அழைக்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் இதில் அடங்கும்.

''ஆயிஷாவே! நீ என்மீது சந்தோஷமாக இருக்கிறாயா..? அல்லது கோபமாக இருக்கிறாயா..? என்பதை நான் சாதாரணமாக அறிந்து கொள்வேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். எப்படி? என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கேட்க, ''முஹம்மத் உடைய இறைவன்மீது சத்தியமாக" என்று நீ கூறினால், சந்தோஷமான இதயத்துடன் நீ இருக்கிறாய் என்பதை உணர்வேன்.''

''இப்ராஹீம் உடைய இறைவன் மீது சத்தியமாக" என்று நீ கூறினால் உன் உள்ளம் கோபத்தில் இருக்கிறது என்பதையும் நான் அறிவேன்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா, புகாரி, முஸ்லிம்)

_தம் கணவரை ''முஹம்மத்" என்ற பெயரால் அழைப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சந்தோஷத்தோடு அனுமதிக்கிறார்கள்._ 

எனவே கணவனின் பெயரை மனைவி தாராளமாகச் சொல்லலாம்.

_இன்று கூட, அரபு நாடு செல்பவர்கள் சாதாரணமாக இந்நிலையை காண்பார்கள்._

_கணவன் பெயரை மனைவி சொல்லக்கூடாது என்பதெல்லாம் நமது நாட்டு-மாற்று சமூகத்தவரின் பழக்கமாகும். அந்த பழக்கத்தின் தாக்கத்தினால் நம் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பெரும்பாலோர் கணவன் பெயரை மனைவி சொல்வது மரியாதைக் குறைவு என்று நினைக்கின்றனர். இது தவறு. இது சுன்னத்துக்கு மாற்றான கருத்து என்று கூட சொல்லலாம்._

இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்" என்பது நபிமொழி (புகாரி) இந்த நபிமொழியையும் கருத்தில் கொண்டால் மனைவி தம் கணவனின் பெயர் சொல்லி அழைப்பது மிகவும் நியாயமானதே என்பதை விளங்கலாம்.

-MSM. றிஸ்வான்-