பழைய பேரூந்து நிலையம் 31 ஆம் திகதியில் இருந்து செயற்படாது என வவுனியா நகரசபையில் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் செயலாளரினால் கையொப்பமிட்டு பழைய பேரூந்து நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள அறிவித்தலில் வட மாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய வவுனியா நகரசபைக்குரிய பேரூந்து நிலையம் 31.12.2017 நள்ளிரவு 12 மணியில் இருந்து மூடப்படவுள்ளதால் 01.01.2017 இல் இருந்து பொது மக்கள் தமது பிரயாணங்களை புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேரூந்துகளும் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.