இறக்காமத்திற்கென ஒரு பெண்கள் பாடசாலையின் அவசியம் பற்றி சிந்திப்போமா..
மாணவர் கல்வி முன்னேற்றத்தில் பல்வேறு படிநிலைகளுக்கு வலுச்சேர்க்க வேண்டி, பெண்கள் பாட சாலை ஒன்றின் உருவாக்கம் பற்றி பெற்றோர்கள், பொதுமக்கள், புத்திஜீவிகள் அரசியல்வாதிகள் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் அமைப்புக்கள் இளைஞர்கள் என அனைவரும் அவசரமாகவும் அவசியமாகவும் சிந்திக்க வேண்டியுள்ளது.. இதன் தேவை பற்றிய வாதப்பிரதி வாதங்கள் பல இருந்தும் மறுக்கமுடியாத பல உண்மைகள் பட்டியலுக்குட்பட்டிருந்தாலும்..
அவற்றை பொதுவெளியில் விவாதிப்பது நாகரிகமாக இருக்காது என்பதால், பொதுப்படையாக சிந்தித்து, பக்கச்சார்பற்று, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை முற்படுத்தாது, முயற்சிப்போமாக... பொதுப்படையான ஒன்றுகூடல்களும் கருத்துரைகளும் அவசியப்படுகின்றன... என்ன செய்யலாம்?
Dr P.M.Rizwan

