புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்லுமாறு தம்மை கட்டாயப்படுத்தினால் முதலாம் திகதி முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இலங்கை போக்குவரத:து சைபயின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவன் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
பேரூந்து நிலையம் தொடர்பாகவழக்கொன்று நீதிமன்றத்தில் உள்ளது. இந் நிலையில் வட மாகாண முதலமைச்சரினால் நேற்றைய தினம் புதிய பேரூந்து நிலையம் தொடர்பாக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து புதிய பேரூந்து நிலையத்திற்கு எம்மையும் செல்லுமாறு தெரிவித்ததுடன் பழைய பேரூந்து நிலையத்தினை மூடுமாறு தொவித்துள்ளார்.
இதன்போது எமக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனினுமு; வேறு பலர் இவ்விடயத்தில் சம்பந்தப்படாதவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். 1800 மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட எமது சங்கத்தினை வெளியேறுமாறு தெரிவித்து முதலமைச்சர் கூட்டத்தை நடததியதனால் எம்மை அவமதித்து விட்டார்.
இந் நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது ஓர் நீதியரசராக இருந்தவர் நீதிமன்றத்தையே அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இந் நிலையில் நாம் கடந்த 53 வருடங்களாக செயற்பட்டு வரும் பழைய பேரூந்து நியைலத்தில் இருந்து எம்மை வெளியேற்ற கோருவது நியாயமற்றது. நாம் 2018 ஆம் ஆண்டுக்கான நிதியை நகரசபைக்கு செலுத்தியுள்ளோம்.
எனினும் அப்பணத்தை மீண்டும் எமக்கு செலுத்திவிட:டு எம்மை வெளியேற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புதிய பேரூநது நிலையத்திற்கு செல்லுமர்று தெரிவிக்கின்றனர்.
எனவே எமது சேவைகளை புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து செயற்படுத்துமாறு தெரிவித்தால் எமது தொழிலாளர்களின் நலன்கருதி முதலாம் திகதயில் இரந்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.