வவுனியா ஊடகவியலாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இத்துடுப்பாட்டப் போட்டிக்கு வவுனியா சமுதாய பொலிஸ் குழுவினர் ஆதரவு வழங்கியிருந்தனர்.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள யங்கிஸ்ரார் விழையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆதிவாசிகள் அணியினர் உட்பட நான்கு அணியினர் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
தங்கள் பாரம்பரிய ஆடையுடன் வருகைதந்திருந்த ஆதிவாசிகள் மற்றும் பிரதம விருந்தினர்கள் மாலைபோட்டு வரவேற்கப்பட்டதுடன் பிரதம விருந்தியராக கலந்துகொண்டிருந்த வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி மங்கள விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.
நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் ஆர். தயாபரன், தமிழ் விரட்சத்தின் தலைவர் எஸ். சந்திரகுமார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், மற்றும் சமூகசேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா நிருபர்