வடமாணத்தை சேர்ந்த கழகங்களுக்கிடையிலான கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 30/12/2017 வவுனியாவில் நடைபெறவுள்ளது.

ஆகாஸ் வெற்றிக் கிண்ணத்திற்கான இப்போட்டியானது வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் கண்டி வீதியில் உள்ள பொலிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வட மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடைபெறவுள்ள கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் 32 கழகங்கள் பங்குபற்றவுள்ளது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 14012018 இறுதிச் சுற்றுப்போட்டிகள் நடைபெறும் என்பதுடன் 10 ஓவர்களை கொண்ட இப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகும் அணிகள் 20 ஓவர்களைக்கொண்ட சுற்றுப்போட்டியில் விழையாடும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வடமாகாணத்திலுள்ள திறமையான வீரர்களை வெளிக்கொணர்தலும், பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான நல்லுறவை ஏற்படுத்தலுமே இத் துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் நோக்கம் என ஆகாஸ் நிறுவனத்தின் இயக்குனர் எஸ் ராம்சுப்பிரமணியன் தெரிவித்தார்.  

ஆகாஸ் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் முதலாம் பரிசாக மூன்று இலட்சம் ரூபாவும், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாவும், வழங்கப்படவுள்ளது.