தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வேட்பாளர்கள் அறிமுகம், வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் சமகால அரசியல் தொடர்பிலும் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதில் தமிழரசுக் கட்சித் தலைவரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவமோகன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலநச்து கொண்டனர்.