கல்குடா சைடா அமைப்பின் ஏற்பாட்டில் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் இம்முறை பல்கலைக்கழகத்திக்கு  செல்லவுள்ள மாணவ மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  24 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து இம்முறை பல்கலைக்கழகம் செல்லவுள்ள ஏராளாமான மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.எல். நஷ்மல் பலாஹி, ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான ஏ.எல். பீர் முகம்மட் காஸிமி, ஜம்இய்யாவின் பொதுத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட அதிபருமாகிய ஏ.ஹபீப் காஸிமி, தியாவட்டவன் தாருஸ்ஸலாம் அதிபர் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி, தாருஸ்ஸலாம் கலாபீட விரிவுரையாளர் ஏ.எல். முஸ்தபா ஸலாமி மற்றும் மாணவர்களின் பெற்றார்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.​​​

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)