வஞ்சம் அகற்றி
நெஞ்சமெல்லாம் தொட்டுச் சென்ற
நேற்றைய (2017.12.24) அஷ்ரபியன் தினத்திற்காக அடியேனால் பாடப்பட்ட கவிதையிது...
எண்பத்தஞ்சில
எழவறியாப் பிள்ளையாகநாங்க
எட்டு வச்சி வந்த எடம்
எங்கள் அஷ்ரப்பு வித்தியாலயம்
தகட்டுக் கொட்டிலொன்ட
தந்தாங்க வகுப்பறையா
தகுதிமாறிப் போனாலும்அந்த
தகட்ட இன்னும் மறக்கயில்ல
மம்மத்தம்பி சேர் எங்களோட
மல்லுக்கட்டி நிப்பாரு
மதியபோசனமாக
மஞ்ச விசுக்கோத்தும் தருவாரு
அந்தக் காலத்த
அடியோட மறக்கவொண்ணா
இந்தக் காலத்துல
இருக்குமது பொய்போல
சிப்பி ஓட்டுக் கட்டிடம்
சிரிச்சி எங்கள வரவேற்கும்
நீறால கட்டினாலும் அது
சீராகத் தானிருக்கும்
நடமாடும் கக்கூஸிஅதுக்கு
நல்லதொரு கதவில்ல
ஒன்டுக்குப் போறன்டாலும்
ரென்டு பேர்வேணும் காவலுக்கு
வாகை மரத்தடியிலயும்
வகுப்பறைகள் அமைந்திருக்க
காகங்கள்ள கசகரணம்
களிசனில தான் வெளங்கும்
அந்தக்காலத்த
அடியோட மறக்கவொண்ணா
இந்தக் காலத்துல
இருக்குமது பொய்போல
மேடைவகுப்பும் அதுக்கு
மேலான மாமரமும்
பிஞ்சி புடிச்சி எங்கட
நெஞ்செல்லாம் பால்வாக்கும்
புளியங்கா பெரப்பெங்கா
புது புரியாணி போலரிக்கும்
விசுக்கோத்து வழங்கி நல்ல
விசினிசும் களைகட்டும்
அந்தக்காலத்த
அடியோட மறக்கவொண்ணா
இந்தக் காலத்துல
இருக்குமது பொய்போல
கான் மூத்தப்பாட
கடவல் தொறந்திருக்கும்
பஞ்சம் போக்கிடத்தான்
பால்கிணறும் காத்திருக்கும்
மௌலானா சேர் இருந்தார்
மலப் பெரம்பும் வெச்சிருப்பார்
இழுப்பாரு ரெண்டிழுவ
இப்ப நெனச்சாலும் பயம் வருதே
அலிசேரு வந்தாருன்டா
எலிபோல அடங்கிடுவம்
கலிகாலம் எப்பபோகும் என்ற
கனவோட காத்திருப்பம்
அந்தக்காலத்த
அடியோட மறக்கவொண்ணா
இந்தக் காலத்துல
இருக்குமது பொய்போல
வளங்கள் கொறஞ்சகாலம்
களங்கமென்டு ஏதுமில்லநல்ல
உளங்கள் இருந்ததால
உயர் பெற்று வாழுறோமே
வறுமைக்குள்ள கட்டுண்ட
வக்கத்த எங்கள
திக்கற்றுச் சென்றிடாமநல்ல
திசைகாட்டித் தந்த எடம்
காலங்கள் மாறி
கலாசாலைகள் தாண்டினாலும்
முகவரி தந்த இந்த
முதுசத்த மறக்கவொண்ணா
உயிலுக்கே உயிர்தந்துஎங்கள
உரமூட்டி வளர்த்த எடம்
உலகளவில் உயர்வு பெறதினம்
உருகுகிறோம் இறைவனிடம்
வாழ்க அஷ்ரப் கலாசாலை!
வளர்க அஷ்ரபியன் தினம்!
*பசீல் இஸ்மாயில்
க.பொ.த (சா/த)1995
நெஞ்சமெல்லாம் தொட்டுச் சென்ற
நேற்றைய (2017.12.24) அஷ்ரபியன் தினத்திற்காக அடியேனால் பாடப்பட்ட கவிதையிது...
ஞாபகங்கள்...
எண்பத்தஞ்சில
எழவறியாப் பிள்ளையாகநாங்க
எட்டு வச்சி வந்த எடம்
எங்கள் அஷ்ரப்பு வித்தியாலயம்
தகட்டுக் கொட்டிலொன்ட
தந்தாங்க வகுப்பறையா
தகுதிமாறிப் போனாலும்அந்த
தகட்ட இன்னும் மறக்கயில்ல
மம்மத்தம்பி சேர் எங்களோட
மல்லுக்கட்டி நிப்பாரு
மதியபோசனமாக
மஞ்ச விசுக்கோத்தும் தருவாரு
அந்தக் காலத்த
அடியோட மறக்கவொண்ணா
இந்தக் காலத்துல
இருக்குமது பொய்போல
சிப்பி ஓட்டுக் கட்டிடம்
சிரிச்சி எங்கள வரவேற்கும்
நீறால கட்டினாலும் அது
சீராகத் தானிருக்கும்
நடமாடும் கக்கூஸிஅதுக்கு
நல்லதொரு கதவில்ல
ஒன்டுக்குப் போறன்டாலும்
ரென்டு பேர்வேணும் காவலுக்கு
வாகை மரத்தடியிலயும்
வகுப்பறைகள் அமைந்திருக்க
காகங்கள்ள கசகரணம்
களிசனில தான் வெளங்கும்
அந்தக்காலத்த
அடியோட மறக்கவொண்ணா
இந்தக் காலத்துல
இருக்குமது பொய்போல
மேடைவகுப்பும் அதுக்கு
மேலான மாமரமும்
பிஞ்சி புடிச்சி எங்கட
நெஞ்செல்லாம் பால்வாக்கும்
புளியங்கா பெரப்பெங்கா
புது புரியாணி போலரிக்கும்
விசுக்கோத்து வழங்கி நல்ல
விசினிசும் களைகட்டும்
அந்தக்காலத்த
அடியோட மறக்கவொண்ணா
இந்தக் காலத்துல
இருக்குமது பொய்போல
கான் மூத்தப்பாட
கடவல் தொறந்திருக்கும்
பஞ்சம் போக்கிடத்தான்
பால்கிணறும் காத்திருக்கும்
மௌலானா சேர் இருந்தார்
மலப் பெரம்பும் வெச்சிருப்பார்
இழுப்பாரு ரெண்டிழுவ
இப்ப நெனச்சாலும் பயம் வருதே
அலிசேரு வந்தாருன்டா
எலிபோல அடங்கிடுவம்
கலிகாலம் எப்பபோகும் என்ற
கனவோட காத்திருப்பம்
அந்தக்காலத்த
அடியோட மறக்கவொண்ணா
இந்தக் காலத்துல
இருக்குமது பொய்போல
வளங்கள் கொறஞ்சகாலம்
களங்கமென்டு ஏதுமில்லநல்ல
உளங்கள் இருந்ததால
உயர் பெற்று வாழுறோமே
வறுமைக்குள்ள கட்டுண்ட
வக்கத்த எங்கள
திக்கற்றுச் சென்றிடாமநல்ல
திசைகாட்டித் தந்த எடம்
காலங்கள் மாறி
கலாசாலைகள் தாண்டினாலும்
முகவரி தந்த இந்த
முதுசத்த மறக்கவொண்ணா
உயிலுக்கே உயிர்தந்துஎங்கள
உரமூட்டி வளர்த்த எடம்
உலகளவில் உயர்வு பெறதினம்
உருகுகிறோம் இறைவனிடம்
வாழ்க அஷ்ரப் கலாசாலை!
வளர்க அஷ்ரபியன் தினம்!
*பசீல் இஸ்மாயில்
க.பொ.த (சா/த)1995

