தீர்ப்பு எழுதி  பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்துவிட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் தெரிவித்தார் யாழ்மாவட்ட த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்

வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர்ப.சத்திலிங்கம்தலைமையில்  நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடுர்பான விளக்கமளிக்கும் கூட்டத்திNலுயெ இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

ஓற்றiயாட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்பதே அனைத்து ஊடகங்களும் செய்கின்ற பரப்புரையாகவுள்ளதுடன் தற்போதும் ஆசிரியர் தலையங்களில் எழுதிக்கொண்டிருக்கின்றது. இது ஊடகங்களின் பொய்யான கருத்தாகும். இன்று சுட்டு விரல் நீட்டி நேரடியாக கூறுகிறேன்.

உங்களிற்கு தமிழிலே எழுதியதை வாசிக்க முடியாமல் இருக்கின்றது. இடைக்கால அறிக்கையில் முதல் பக்கத்தில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. அதனை படித்து பார்த்து மக்களிற்கு சொல்ல முடியாமல் தின்டாத்தில் இருக்கின்ற ஊடகங்கள் தான் எங்கள் மத்தியில் இருக்கின்றன. 112 பக்கம் கொண்ட இடைக்கால அறிக்கையிலே 110 பக்களை விட்டுவிடுங்கள் முதல் இரண்டு பக்கங்களை படித்து பாருங்கள்.

சமஸ்டி, ஒற்றையாட்சி என்பன என்ன என்று வர்ணித்து உடனடியாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகின்றது, ஒற்றையாட்சி இந்நாட்டுக்கு உகந்தது அல்ல என்று கூறப்படுகிறது. இது மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. இது எங்களது பின்னனைப்பில் இல்லை அனைத்து கட்சிகளும் சேர்ந்து எழுதிய இடைக்கால அறிக்கையில் ஒற்iறாட்சி நாட்டுக்கு பொருத்தமற்றது என்று எழுதப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் இதைபற்றி பொய் பரப்புரை செய்யப்படுகிறது. இந்த பொய் பரப்புரையை வைத்துக்கொண்டு ஒரு கட்சி மக்களிடத்தே கோருகிறார்கள் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற வாக்காக இந்த உள்ளுராட்சி தேர்தலை பாவியுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள்தான் ஒற்றையாட்சி நிலைப்பாட்டை கொண்ட கட்சியினர்.

நாங்கள் சமஸ்ஸ்டியை கோருகின்ற கட்சியயினர். ஆகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒற்றையாட்சி கோட்பாடு கொண்ட கட்சி சரித்திர பூர்வமாக சமஸ்டி தீர்வை எதிர்த்த கட்சி இன்று கூறுகிறார்கள் நாங்கள் ஒற்றையாட்சியை ஏற்றுவிட்டோம் அதனால் இந்த தேர்தலிலே இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்கின்றனர். ஆவர்களது ஒற்றையாட்சி கொள்கை பொருத்தமற்றது என்றுதான் இந்த இடைக்கால அறிக்கை கூறுகிறது. 2010இல் இரு தேசம் ஒரு நாடு என்றனர் பின்னர் 2015இல்  குறைத்து வாசித்தனர். பின்னர் தமிழ் மக்கள் பேரவை வந்தவுடன் எழுக தமிழ் மேடைகளில் சென்று எல்லாவற்றையும் மறந்து சமஸ்டி என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

இதைதான் 1947இல் இருந்து எமது கட்சியின் பெயராகவே கூறிக்கொண்டு வருகின்றோம். சமஸ்டியை பாட்டன், தகப்பன், மகன் என தொடர்ச்சியாக எதிர்த்துக்கொண்டுதானே வந்தீர்கள். இப்போது திடீரென சமஸ்டி மீது காதல் வந்துள்ளதுடன் தாங்கள்தான் சமஸ்டிக்கான உண்மைக்கான காதலர்கள் என தெரிவிக்கின்றனர். படிக்க வாசிக்கத்தெரியாதவர்கள் குழம்புவதை ஏற்றுக்கொள்ளலாம். புடித்தவர்கள் என சொல்பவர்கள் பலதீர்ப்பை எழுதியவர்கள் என்று சொல்பவர்களுக்கும் இது விளங்கவில்லை. இடைக்கால அறிக்கையை நிராகரிப்போம் என சொல்கிறார்கள். 

ஒருமணித்தியாலயத்தின் பின் சொல்கிறார்கள் நான் இன்னும் படித்து பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். படித்து பார்க்காமல் எப்படி நிராகரிப்பது நீங்கள் எப்படி தீர்ப்பு எழுதினீர்கள். அல்லது தீர்ப்பு எழுதி பதின்மூன்று பதிநான்கு ஆகியதால் மறதி வந்துவிட்டதா. என தெரிவித்தார்.

சிவக்குமார்