தேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகமும், மாபெரும் பொதுக்கூட்டமும் (29) அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.
தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்அதாஉல்லாவின் பிரதான பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபைளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அத்துடன், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் - 2018 க்குரிய தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்பட்டது.
மேற்படி குறித்த நிகழ்வில் கட்சியின் போராளிகள், ஆதரவாலர்கள் என பெருந்திரலானோர் கலந்துகொண்டனர். குறித்த கூட்டம் தேசிய காங்கிரசிக்கு பெரும் எழுச்சியாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.