உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. ஆந்த வகையில் இன்று வவுனியாவிலும் இச்செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பாலுறவு நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் எல்லோரும் முக்கியம்  எனும் தொனிப்பொருளில் விழிப்ணர்வு ஊர்வலம் வவுனியாவில் இடம்பெற்றது.

பாலுறவு நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட  பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கு.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்வூர்வலமானது வவுனியா பொது வைத்திய சாலையில் இருந்து புறப்பட்டு குருமண்காடு ஊடாக மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா பஜார் வீதியினூடாக பொதுவைத்தியசாலையை வந்தடைந்தது.

இதன்போது எச்ஐவி தொடர்பாக மக்களிற்கும் தெளிவூட்டும் வகையில் கையேடுகள் வழங்கப்பட்டன. மேலும். இவ்விழிப்புணர்வு ஊர்வலத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள், பொதுமக்கள், தாதியர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இதே வேளை எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றும் வவுனியா பொது வைத்திய சாலையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.