நீண்ட காலமாக கல்வியமைச்சின் சுற்றறிக்கைகள் தமிழில் வெளியிடப்படாமை தொடர்பாக புகார் சொல்லப்பட்டு வருகின்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் தமிழராக இருந்தும் இந்த பாகுபாடு தொடர்வது கவலைக்குரிய விடயமே! Smart Class Room க்கு கோடிக்கணக்கில் செலவிடப்படும் சந்தர்ப்பத்தில் இந்த மயிரளவு விடயத்தில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தாமல் இருப்பது அதை விடக் கவலைக்குரிய விடயமாகும்.
கல்வியமைச்சின் சுற்றறிக்கைகள் தமிழில் வெளியிடப்படும் என்ற கல்வி அமைச்சரின் வாக்குறுதியை அதிகாரிகள் எப்போது செயல்படுத்துவார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வருடம் கல்வி அமைச்சு சுமார் 50 சிங்கள சுற்றறிக்கைகளை வெளியிட்டு உள்ளது. 24 மட்டுமே இணையத் தளத்தில் உள்ளது. தமிழ் சுற்றறிக்கை இரண்டு மட்டுமே உள்ளது. தொழில் நுட்ப பிரிவின் இலட்சணம் இது!
-அன்பு ஜவஹர்ஷா-
தமிழ் சுற்றறிக்கைப் பகுதி
சிங்கள சுற்றறிக்கைப் பகுதி


