கல்வித்துறை ஆக்கங்கள் தொடர்ந்து ஆய்வு அடிப்படையில் எழுதி வரும் ஏ.எல் .நௌபீரின் ”இறக்காமம் கல்வியும் அரசியலும்” நூல் வெளியீட்டு விழா இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (03.12.2017) ம் திகதி இடம் பெற்றது.
இவர் முஸ்லிம் சமூகம் செழுமைப்படவேண்டிய கல்வி,அரசியல் என்ற இரண்டு துறைகளையும்ஆய்வு செய்து புள்ளிவிபரத் தகவல்களோடு பல்வேறு தலைப்புகளில் தொகுத்து நூலாக்கி தன்னுடைய நூலை வெளியிட்டுள்ளார்.
இந்நிகழ்வின் கௌரவ அதிதிகலாக தென்கிழக்கு பல்கலைக்கழக இயந்திர பொறியியல் பீட தலைவர் கலாநிதி முஸாதிக் அப்துல் மஜீத் , முன்னைநாள் கல்முனை மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் , மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன் , அக்கரைப்பற்று ஜூனியஸ் வைத்தியசாலை பணிப்பாளர் னுச.றிஜாப் , றெபாய்டீன் SLFP மாவட்ட இணைப்பாளர்,அம்பாரை மாவட்ட செயலக பிரதம கணக்காலர் ஐ.எல் ஹூஸைன் , இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹிஜா முஸஃபீர்,அம்பாரை பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல் தௌபிக் போன்றோரும்.
இறக்காம பிரதேச கல்விமான்கள்,ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
இறக்காம பிரதேச கல்விமான்கள்,ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
ஸிப்னாஸ் ஹாமி







